கன்னியாகுமரி மாவட்டம், குமாரபுரம் பேரூராட்சி 1 ஆம் வார்டு மதிமுக சார்பில் இன்று 13-01-2016 மாலை பெருஞ்சிலம்பு கிராமத்தில் தெரு முனை கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் கழக கொடியேற்றி தொடங்கிய தெரு முனை பிரச்சாரக் கூட்டத்தில், மக்கள் நலக் கூட்டணியின் குறைந்த பட்ச செயல் திட்டம் பற்றி விளக்கி பேசினார்கள் மதிமுக நிர்வாகிகள்.
இந்த நிகழ்ச்சியில், குமரி மாவட்ட அவைதலைவர் தேவராஜ், மதிமுக மாவட்ட செயலாளர், வழக்கறிஞர் வெற்றிவேல், மாவட்ட மாணவரணி செயலாளர் சாஜி, மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் சுரேஷ் குமார், நாகர்கோயில் நகர செயலாளர் ஹெக்டர் ஜெரால்டு, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த ராஜன், மகளிரணி செயலாளர், உள்ளிட்ட நிர்வாகிகள் அகலந்துகொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment