மதிமுக மற்றும் மதிமுக அங்கம் வகிக்கும் மக்கள் நலக்
கூட்டணியின் அன்றாட அரசியல் நிகழ்வுகளை பொதுமக்களிடையே உலகளாவிய அளவில் எடுத்து சென்றுக்
கொண்டிருக்கின்ற இணையதள அணியில், ஓமன் மதிமுக இணையதள அணியும் இயன்ற பங்களிப்பை அளித்துக் கொண்டிருக்கிறது.
அதன்
செயல்வீரர்கள் கூட்டமானது வருகிற 26-02-2016 வெள்ளி கிழமை மாலை 3.00 மணி அளவில்
மஸ்கட் ரூவியில் அமைந்துள்ள நவீன் அப்பார்ட்மன்டில் நடைபெற
இருக்கிறது.
ஏற்கனவே தலைவர் வைகோ வெளியிட்டுள்ள செய்திகளின் படி வருகிற 2016
சட்டசபை தேர்தல் மற்றும் கழக வளர்சிக்கான நிதி ஆதாரம் பற்றியும், நமது இணைய
பங்களிப்பை எவ்வாறு பலப்படுத்தலாம் என்பன போன்றவற்றை கலந்துரையாட இருக்கிறது.
எனவே, ஓமன் மதிமுக இணையதள அணியினர் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்துகொண்டு உங்களது
கருத்துக்களையும் தெரிவித்து, கழகத்தை முன்னோக்கி செல்வதற்கான ஆலோசனைகளையும் வழங்க அன்போடு
கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment