கலிங்கப்பட்டியில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பொங்கல் விழாவிலும், அனைத்து மாநாடுகளிலும் உணவு வகைகளையும் தயாரித்து வழங்கும் "அறுசுவை சக்கரவர்த்தி" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களால் அழைக்கப்படும் பெருந்துறை குமார் அவர்களின் அருட்தவப் புதல்வி புனிதவதி - பிரவின் ஆகியோருடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி 18.02.2016 இன்று மாலை திருச்செங்கோட்டில் நடந்தது.
இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment