செப்டம்பர் 15 ஆம் தேதி திருப்பூரில் நடைபெறுகின்ற திராவிட இயக்க நூற்றாண்டுவிழா மாநாடு, 107 ஆவது அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் விதமாக மதிமுக இணையதள அணி சார்பாக ஒரு லட்சம் குறுஞ்செய்திகள் அனுப்பும் பணி நாளை தமிழின முதல்வர் வைகோ அவர்களின் முன்னிலையில் துவங்க இருக்கிறது.
மேலும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தலைவர் பேசும் குரல் அழைப்பாகவும் 50000 பேருக்கு அனுப்ப முயற்ச்சி எடுக்கப்படுகிறது. இந்த நிகழ்வும் நாளை தொடங்கும். எனவே இந்த நிகழ்வுகளுக்கான அனுமதியை தலைவரிடம் இணையதள அணியினர் பெற்றுக்கொண்டார்கள்.
இது வெற்றிகரமாக நடக்க ஒத்துழைத்த அனைத்து இணையதள தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
எனவே சென்னையில் இருக்கும் மதிமுக தோழர்கள் நாளை இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு ஓமன் இணையதள அணி சார்பில் அன்போடு கேட்டுகொள்கிறோம்.
இந்த நிகழ்ச்சிகள் காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்பதூர் வல்லக்கோட்டையில் திராவிட இயக்க கருத்துப்பட்டறை நடக்கும் இடத்தில் நடைபெறுகிறது.
2015 மதிமுக மாநாட்டுக்கு தலைவரின் அழைப்பு காணொளி இணைக்கப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment