பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைவர் வைகோ அவர்கள் சத்யமூர்த்தி பவன் தாக்குதலுக்கு கண்டனம்
தெரிவிக்கிறார். தவறாக பேசினால் கண்டிப்பது
தவறில்லை. ஆனால் கொலை மிரட்டல் விடுவது தவறு. காங்கிரசை பற்றி மாற்று கருத்து இல்லை.
ஆனால் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடாது என கூறினார்.
ராஜபக்சேஅணி தோல்வியுறுவது மகிழ்ச்சி. ஆனால் ரணிலும் அதே
பாதையில்தான் செல்வார். தமிழர் பகுதியில் தமிழர் வெற்றி பெற்றது ஆறுதல் அளிக்கிறது என வைகோ தெரிவித்தார்.
தோழர்களே!
பாஜக அலுவலகம் தாக்கப்பட்ட போது முதலாக
சென்று ஆதரவு தெரிவித்தவர் தலைவர் வைகோ. திருமங்கல இடைத்தேர்தலில் திமுகவினரின்
அராஜக போக்கை கண்டித்து அதிமுக மதுரை அலுவலகத்தை காத்தவர் தலைவர் வைகோ.
மாற்றுக் கருத்துகள் இருந்தாலும் கொள்கை
மாறாமல் மிரட்டல் அரசியலை கண்டிக்க இளங்கோவன் இல்லம் செல்கிறார் தலைவர் வைகோ
அவர்கள்.
இப்படிபட்ட மாண்பு மிக்க தலைவனை வரும் சட்டசபை தேர்தலில் அரியணையில் அமர
வையுங்கள் என இரு கரம் கூப்பி ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
"பம்பரம் சுழலட்டும், மதிமுக படை வெல்லட்டும்.
தமிழர் வாழ்வு சிறக்கட்டும்"
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment