தமிழின முதலிவர் வைகோ அவர்களின் அரசியல் பொதுவாழ்வில் 50-ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு பெரம்பலூர் ம.தி.மு.க நகர கழகத்தின் சார்பில் 11வது வார்டில் கழக கொடியேற்று விழா நடைபெற்றது. கொடியேற்றத்துடன் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாநில அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் திரு.கி.வரதராஜன் BA BL அவர்கள் கழக கொடியை ஏற்றினார். மாவட்ட செயலாளர் செ.துரைராஜ், மாவட்ட அவைத்தலைவர் செல்ல.கதிர்வேல், மாவட்ட துணை செயலாளர்கள் சரவணன், ரபியூதின், ஒன்றிய செயலாளர்கள் முத்து, ரெங்கராஜ், LIC ரெங்கராஜ், மாவட்ட பொருளாளர் ஜெயசீலன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மாவு.சுந்தரம், மறுமலர்ச்சி மாணவர் மன்றத்தின் தம்பி தமிழை உணர்வுகளால் வடிக்கும் வெடிக்கின்ற நெருப்பு பிளம்பு தமிழருண் மற்றும் கழக மாணவர் அணி, இளைஞர் அணி தோழர்கள் கலந்து கொண்டனர்.
மறுமலர்சி மாணவர் மன்ற நிர்வாகிகள் கழக முன்னோடிகளுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர். நிகழ்சி ஏற்பாடுகளை 11வது வார்டு நிர்வாகிகள் ஜோதி ஆனந்தன், வினோத், சசிக்குமார் , விக்னேஷ், மனோஜ் ஆகியோர் செய்தனர்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment