Monday, August 24, 2015

"தின செய்தி" தினசரி நாளேடு விரைவில் உங்கள் இல்லங்களில்!

அன்பிற்கினிய என் தமிழ் சொந்தங்களே!

தமிழகத்தின் வாழ்வாதாரங்களை காத்துக்கொண்டிருக்கும், ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருக்கும், தமிழினத்தை எதிரிகள் எட்டிகூட பார்க்க கூடாது என பாதுகாக்கும், ஆகாயம் தேடாத ஆகாயம், தமிழர்களின் இதயத்தில் புரட்சியின் வடிவில் புயலாக வீசிக்கொண்டிருக்கிற, உலக தமிழ் மக்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிற தமிழின தலைவர் வைகோ அவர்களின் செய்திகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் மக்கள் சேவைகள், தமிழக மக்களின் வாழ்வாதார போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள், சிறை வாழ்க்கைகள் என ஏராளமான சமூக சேவையினை மக்கள் மத்தியில் சென்றடையாதவாறு அனைத்து பத்திரிகைகளும் இன்றளவும் பார்த்துக்கொண்டன. இதனால் நடுநிலையாக உடகதுறையிலே செய்திகளை வெளியிடுகின்ற இமயம் தொலைக்காட்சியை போல இருட்டடிப்பு செய்யப்படுகின்ற செய்திகளையும் தினசரி செய்திதாள்கள் மூலம் பாமரனையும் சென்றடைய செய்ய நடுநிலையான பத்திரிகையை இமயம் குழுமத்தார் தினசரி பத்திரிகையாக "தின செய்தி" என்ற பெயரில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தொடங்குகிறார்கள். 

இதன் சந்தா சேகரிப்பானது கழக தொண்டர்களால் வசூலிக்கபட்டு ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இதனால் கழக தொண்டர்கள் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்ற நிலையில் பத்திரிகையானது மிக விரைவிலே தொடக்க விழா கொண்டாடபட இருக்கிறது. மிக நல்ல தரத்துடன் அனைத்து செய்திகளையும் உள்ளடக்கிய தினசரி நாளேடாக பாமர மக்கள் மடியில் தினசரி தவளும். இதில் மதிமுக வின் செய்திகளும் மக்களை சென்றடையும் விதமாக இருக்கும். அதன் மூலம் மக்கள் கழகத்தின் நற்செயல்களை அறிந்துகொண்டு வருகிற தேர்தலில் நல்ல பெயருடன் கூடிய கட்சியான மதிமுகவிற்கு பம்பரம் சின்னத்தில் வாக்களிக்க இதுவும் ஒரு ஊன்றுகோலாக அமையும்.

எனவே இந்த பத்திரிகை மிக விரைவிலே தொடக்க விழா நாள் அறிவிக்கப்படும் என அன்போடு தெரிவித்துக்கொள்கிறோம். இந்த பத்திரிகை தொடங்கிய பின்னர் இணையதளத்திலும்  "தின செய்தி" பத்திரிகையின் வலைதளமான http://www.dinacheithi.com/ இல்  (e-paper) மூலம் படிக்கலாம்.  

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment