Tuesday, August 25, 2015

பல்லடத்திற்கு படையெடுப்போம், மாநாட்டிற்கு மகுடம் சூட்டுவோம்!

மதிமுக நடத்துகின்ற திராவிட இயக்க நூற்றாண்டு விழா, 107 ஆவது அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு கோவை - பல்லடம் சாலையில் நடக்க இருக்கிறது. அதற்கான பணிகள் மிக வேகமாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் 1 மணி அளவில் பந்தலின் ஒரு பக்கத்திற்கு மேற்கூரை அமைக்கும் பணிகள் தொடங்கி விட்டன. தொழிலாளர்கள் மிகுந்த உற்சாகத்தோடு தலைவர் வாழ்த்தியதை நினைத்து கடுமையாக உழைக்கின்றனர். பந்தல் வேகமாக வளருகிறது. உரு கிடைக்கும் போது ஆட்கள் திரண்டிருப்பார்கள். அப்போது மாநாடாக மகுடம் சூட்டப்பட போகிறது. 

எனவே அன்பு தோழர்களே! பந்தல் தயாராகி கொண்டிருக்கிறது. நாமும் தயாராவோம். சுவர் விளம்பரங்கள் வேகமாக எழுதுங்கள். வாகனத்திற்கு இப்போதே ஆயத்தமாக நேரத்தை குறிப்பிட்டு ஓட்டுநர்களிடத்தில் சொல்லுங்கள். அந்தந்த அணியினரின் செயலகளை பட்டியலிட்டு செயலாற்றுங்கள். 

திருப்பூர் மாநாடு திருப்புமுனையாக அமையட்டும் தமிழகத்திற்கு... இருட்டடிப்பு செய்த ஊடகங்கள் நாம் செய்யும் சேவைகளை, மக்களுக்காக நாம் முன்னெடுக்கும் போராட்டங்களை, மதிமுகவினரின் செய்திகளையே குறிப்பெடுத்து ஒளிபரப்பும் காலம் கனிந்து கொண்டிருக்கிறது. நேரத்தை விரயமாக்காமல் அனைத்து பணிகளையும் குறிப்பெடுத்து பணியாற்றுவோம். வெற்றி காண்போம்.

தலைவர் வைகோவின் கையில் அதிகாரத்தை ஒப்படைக்க ஓயாமல் உழைப்போம். முன்னேறி செல்வோம். ஆட்சியில் அமருவோம்.

நன்றி.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment