தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் திரு. ஜோயல் அவர்கள் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெற்கு மண்டலத்தில் திருவைகுண்டம் அணையைத் தூர்வாரக் கோரி வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அணையைப் போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என்றும், 15 நாள்களுக்கு ஒருமுறை தூர் வாரப்பட்ட நிலை குறித்து ஓர் அறிக்கையைப் பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்திரவிட்டனர்.
இவ்வழக்கு நாளை 18.08.2015 செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் ஜோயல் சார்பில் வாதிடுவதற்காக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நாளை 18.08.2015 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சென்னை, அரும்பாக்கத்தில் அமைந்துள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தெற்கு மண்டல நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.
கழக கண்மணிகள் வாய்ப்புள்ளவர்கள் தவறாது கலந்துகொள்ள அன்புடன் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment