விருதுநகர் மாவட்டம் இராசபாளையம் மேற்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் 30/08/2015-ல் ஞாயிற்றுகிழமை காலை 11-மணிக்கு அவைத்தலைவர் சி.மலைக்கனி தலைமையில் நடைபெற்றது.
இராசபாளையம் மேற்கு ஒன்றியத்தின் செயலாளர் சிங்கம் தலைவர் வைகோவின் போர்படை தளபதி திரு.ப.வேல்முருகன் அவர்கள் ஆவேசமாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கட்சியை வலுப்படுத்துமாறும், வைகோ தமிழகத்தின் முதல்வராக்குவோம் என உறுதி ஏற்போம் என முழங்கினார்.
பின்னர் க.விநாயகமூர்த்தி சிறப்புரையாற்றினார். நகரச்செயலாளர் வி.எஸ்.இராசா, கிழக்குஒன்றிய செயலாளர் ஆசிலாபுரம் பாண்டுரங்கன், பொதுக்குழுஉறுப்பினர் ஏ.இ.ஞானகுரு, மாவட்டமாணவரணி அமைப்பாளர் அ.மதியழகன், தொழிற் சங்க செயலாளர் காதர் மாமா, பேரூர்கழகச்செயலாளர்கள் ச.முருகேசன், சி.இராமகணேசன் மற்றும் கழக கண்மணிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதிமுக இனையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment