முன்னாள் அதிமுக எம்பி மலைச்சாமி அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார் மதிமுக பொதுச்செயலாளர், தமிழின முதல்வர் வைகோ அவர்கள்.
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
திரு.மலைச்சாமி அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக பதவியில் இருக்கும் போது சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தலைவரின் பணிகளையும் உழைப்பையும் பாராட்டி விட்டு ஓய்வு பெற்றவுடன் உறுதுணையாக இருப்பேன் என்றார்.
பிறகு, கால சக்கரத்தில், அவர் அதிமுக வில் சேர்ந்து தொலைக்காட்சி விவாதங்களில் தலைவர் வைகோவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார்.
ஆனால், இன்று அவரது இல்ல திருமண விழாவில் தலைவர் வைகோ அவர்கள் துணைவியார் ரேணுகாதேவி அம்மையாருடன் கலந்து கொண்டு புத்தக பரிசளித்து மணமக்களை வாழ்த்தினார்கள்.
தலைவர் வைகோ அவர்கள் வாழ்த்தி இருப்பது அரசியல் நாகரீகம் மட்டுமல்ல... நிகழ்கால அரசியல் அதிசயம்... அவர்தான் தமிழின முதல்வர் வைகோ என்பதை காட்டுகிறது....
No comments:
Post a Comment