மதுவுக்கெதிரான போராட்டம் தமிழகமெங்கும் நடைபெறும் நிலையில் சசிபெருமாளின் இறப்பையொட்டி, கலிங்கப்பட்டி மதுபானக்கடையை மூட வைகோவின் தாயார் 200 க்கும் மேற்ப்பட்ட பெண்களுடன் போராட்டம் நடத்தினார். அப்போது நடந்த முற்றுகை போராட்டத்தின் பொழுது பொதுமக்கள் மீதும், வைகோவின் தம்பி ரவிச்சந்திரன் அவா்களின் மீது தமிழக காவல்துறை தாக்கியது. அதில் ரவிசந்திரன் ரத்த காயத்திற்குள்ளாக்கப்பட்டு சிகிச்சை எடுத்தார்.
இந்நிலையில் கலிங்கப்பட்டி மதுக்கடையை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ஆகஸ்ட் 13-ல் தமிழக உள்துறை செயலர், மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் மேலாளர் பதில் தர சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இதுவரை பதிலளித்ததாக தெரியவில்லை.
மறுமலர்ச்சி மைக்கேல்
No comments:
Post a Comment