கடந்த சுதந்திர தினத்தன்று நடைபெற்ற பாவேந்தர் பாரதிதாசனாரின் 125-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக இலக்கிய அணியின் 50-ஆவது நிகழ்ச்சி சென்னை, தியாகராயர் நகர், வடக்கு உஸ்மான் ரோடு-அபிபுல்லா சாலை சந்திப்பில் உள்ள தேவர் மண்டபத்தில் இன்று (15.08.2015 சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
இந்த இலக்கிய நிகழ்ச்சியில்,
என்ற தலைப்பில் மதிமுகவின் இலக்கிய அணியின் பட்டிமன்றம் நடந்தேறியது. இதற்கு இலக்கிய களஞ்சியம் திராவிட பட்டறையின் பேரலை அண்ணன் நெய்வேலி நெருப்பு சொல்லருவி மு.செந்திலதிபன் அவர்கள் நடுவராக ஒளிர்ந்தார். தலைவர் வைகோ அவர்கள் கண்குளிர செவி மடுக்க பட்டிமன்றத்தினை எதிரில் அமர்ந்து கேட்டார்கள்.
ஒரு தொண்டனை சந்தித்து, அவனை சிறைக்கொட்டடியில் பேச கற்றுக் கொடுத்து, பிள்ளைகளை சரி செய்து, திராவிட கொள்கையால் வார்ப்பித்து பட்டி மன்றங்களில் நடுவராகவும். மேடைகளில் தலைவராகவுமாக்கி அழகு பார்த்தவர் நம் தலைவர் வைகோ அவர்கள். ஆனால் அந்த தொண்டன் சோரம் போன நிலையில், அப்துல்லா பெரியார்தாசன் அனைத்து மதிமுக பட்டிமன்றங்களையும் நடுவராக அலங்கரித்து கூர்தீட்டினார் திராவிட கொள்கைகளை. அவர் இவ்வுலகை விட்டு மறைந்தது திராவிட இயக்கத்தில் ஒரு வெற்றிடத்தை ஏற்ப்படுத்தியது.
இப்படிபட்ட நிலையில்தான், பட்டிமன்றங்கள் நடக்காமல் தடைப்பட்டிருந்தன. இதனால் யார் பட்டிமன்ற நடுவர் என்று கேள்வி எழுந்ததால் தலைவருக்கு சிறிது தாக்கம் ஏற்ப்பட்டாலும், தலைவர் அவரின் ஓயாத பயண நிகழ்ச்சிகளால் எப்போதுமே கழகத்தை விழிப்புடன் வைத்திருந்தார்.
இப்போது மதிமுகவின் 50 ஆவது இலக்கிய அணி நிகழ்ச்சி பட்டிமன்றம். அதை கேட்டுக்கொண்டிருந்தார் தலைவர் வைகோ அவர்கள். தன் ஈட்டி செந்திலதிபன் தலைமையில் இரண்டு பக்கத்திலும் பேச அணி அமைந்து விட்டது என்ற மகிழ்ச்சி யில் இருந்தார் தலைவர். இரண்டு பக்க மூவரை கொண்ட அணியினர் ஒருவருக்கொருவர் அணிகளாக சழைத்தவர்களல்லர் என நிரூபித்து காட்டினார்கள்.
அந்த அணிகளில் மதிமுக கொள்கை பரப்பு செயலாளர், கவிதைகளை அடுக்கும் பொடா அழகுசுந்தரம், மதிமுக வெளியீட்டு செயலாலர் உரைகளை அடுக்கி தொடுக்கும் அன்பு அண்ணன் வந்தியதேவன், பட்டிமன்றங்களால் பெயரெடுத்த பாரதி பாஸ்கர் பாராட்டி தள்ளிய கவி பேழை, கழகத்தின் கவிஞர், அண்ணன் மணி வேந்தன், மாணவ செல்வங்களை தன் பேச்சாலும் செயலாலும், உணர்ச்சியை உதிரத்தில் ஏற்றும் உணர்வு மிக்க சகோதரர், மதிமுக மாணவரணி செயலாலர் திமு.ராஜேந்திரன், தனது உரையில் வீர முழக்கத்தை இடி மின்னலாக மாற்றி மிரள செய்யும் அன்பு சகோதரர் மதிமுக மாணவரணி துனை செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம், பட்டிமன்றங்களில் மக்களை முன்னோக்கி நகர செய்யும் விதத்தில் காதுகளுக்கு தேன் பாயும் விதத்தில் சொக்க செய்யும் பட்டிமன்ற சிறந்த பேச்சாளர் அன்புக்குரிய அண்ணன் ராஜ.திருநாவுக்கரசு ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர்.
இவர்கள் இரண்டு அணியினரின் உரை ஆதாரங்களுடன் கூடிய விளக்கத்தை கேட்ட தலைவர் மனம் பூரித்துக்கொண்டார்கள். கழகத்தின் கொள்கைகளை உலகிற்கு எடுத்து செல்லகூடிய உண்மையான கொள்கை போராளிகளை இனம் கண்டு கொண்ட சந்தோசத்தில் இருந்தார் தலைவர் வைகோ. மேலும், நடுவராக இருந்த நெய்வேலி நெருப்பு சொல்லருவி மு.செந்திலதிபன் விளக்க உரையோடு கூடிய தீர்ப்பை கேட்டு தலைவர் வைகோ அவர்கள் மெய் சிலிர்த்து போனார். தலைவர் வைகோ அவர்கள் தன் ஈட்டி யை கூர்தீட்டி பட்டி மன்றத்தின் நடுவராக அமர வைத்து செந்திலதிபனை அழகு பார்த்துக்கொண்டு இருந்தார் தமிழின முதல்வர் வைகோ அவர்கள்.
இப்போது தலைவர் வைகோவின் எண்ண ஓட்டமெல்லாம் அண்ணன் நெய்வேலி நெருப்பு சொல்லருவி மு.செந்திலதிபன் தலைமையில், நம் கழகத்தின் சொல்வேல் சூரர்களின் சுற்று பயணங்கள் இனி தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் முழங்கட்டுமென்பதே! எட்டு திசைகளிலும் முரசுகள் கொட்டும் சத்தம் அலையாக வீசும் காலம் மதிமுகவிற்கு மீண்டும் மலர்ந்து விட்டது என்பதை அன்புக்குரிய அண்ணன் குவைத் மதிமுக வைகோ பாசறையின் அமைப்பாளர் அரிமா பின்னலூர் மு.மணிகண்டன் அவர்கள் தனது முகநூலிலும் குறிப்பிட்டிருந்தார்கள்.
தொய்வற்ற காலங்கள் கரைந்துவிட்டன, இனி நிகழ்காலம் வைகோவின் புகழ் பாடுகிற காலம். காலம் நமக்கு கனிந்து வந்து விட்டது. இதை யாராலும் தடுக்க முடியாது.
இனிமேல் தமிழகம் எங்கும் மறுமலர்ச்சி கொள்கை வேங்கைக்களின் பயணங்கள் தொடரும். இடைவிடாத திராவிட கொள்கைகளை தாங்கிய பட்டிமன்றங்கள் உங்களுக்கு எப்போதும் கிடைத்துக்கொண்டேயிருக்கும். எனவே கழகத்தின் கண்மணிகளை தமிழகம் தழைக்க போராட உறுதியெடுத்திருக்கும் வேங்கைகளை மகிழ்ச்சியோடு வாழ்த்துவோம். அவர்களுக்கு அவரவர் ஊரில் தளம் அமைத்து கொடுப்போம். கழகத்தை வளர்த்தெடுப்போம். ஆட்சியை அதிகாரத்தை கைப்பற்றுவோம். தமிழகத்தை அழிவின் பாதையிலிருந்து மீட்டெடுத்து மக்களை பாதுகாப்போம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
இந்த இலக்கிய நிகழ்ச்சியில்,
"தமிழன் வீழ்ந்தானா? வீழ்ந்தப்பட்டானா?"

No comments:
Post a Comment