காந்தியவாதி சசிபெருமாள் கடந்த ஜூலை மாதம் 31 ஆம் தேதி குமரி மாவட்டம் உண்ணாமலைகடையில் நடந்த மது ஒழிப்பு போராட்டத்தில் மதுவை ஒழிக்க பல வருடங்களாக போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள் அவர்கள் அலைபேசி கம்பத்தில் ஏறி போராட்டம் நடத்தினார். 5 மணி நேரமாக அந்த போராட்டத்தை நடத்தியுள்ளார். பின்னர் காவல்துறை அவரை கீழே இறக்கியுள்ளனர். அபோது அவர் இறந்துள்ளார். இதனையறிந்த மதிமுக பொதுசெயலாளர் வைகோ அவர்கள் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமைக்கு விரைந்து சரிபெருமாள் உடலை பார்த்து மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக அரசை குற்றஞ்சாட்டி இது இயற்கை மரணமல்ல, கொலை செய்யபட்டிருக்கிறார் என சசி பெருமாள் இறந்த அன்றே உண்மையை ஆவேசமாக கூறினார் ஊடகயிலாளர்களிடத்தில்.
இன்னிலையில் சசிபெருமாள் அவர்களின் மகன் விவேக் தனது தந்தையின் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கில் மதிமுக பொதுசெயலாளர் தன்னையும் இனைத்துக்கொண்டார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் சசிபெருமாள் உடல் பரிசோதனை அறிக்கையின் படி தூக்கிலிட்டது போல இறப்பு என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே சசிபெருமாள் மரணம் குறித்து வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் வழக்கு விசாரணை வருகிற சில் தினங்களில் நடைபெற இருக்கிறது. இதனால் வழக்கில் தன்னையும் இணைத்துக்கொண்ட வைகோ அவர்கள் வழக்கு விசாரணை வருகிற படியால் அவரின் இறப்பு குறித்து ஆராய சசிபெருமாள் இறந்த பகுதியான குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த உண்ணாமலைகடைக்கு சசி பெருமாள் இறந்த அந்த அலைபேசி கோபுரம் இருக்கும் இடத்திற்கு 28 ஆகஸ்டு காலை சென்று அங்குள்ள பொதுமக்களிடமும் கலந்துகொண்ட தலைவர்கள், அப்பகுதி பஞ்சாயத்து நிர்வாகிகளிடம் நேரடியாக வழக்கு விசாரணக்கு தேவையான தகவல் சேகரித்தார்.
தலைவர் வைகோ அவர்கள் தகவல்களை சேகரித்துக்கொண்டிருந்தபோது தலைவர் வைகோவை படம் பிடித்து கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி கேமராமேன் ரியாஸ் கால் இடறி வைகோ வின் முன்பு குப்புற கீழே விழுந்தார். இதைக் கண்டு பதறிய தலைவர் வைகோ அவர்கள், உடனே அந்த கேமராமேனை தன் கைகொடுத்து துாக்கி, அடி ஏதும் பட்டிருக்கிறதா? என்று தொட்டு பார்த்து, பணியில் கவனமாக இருங்கள் தம்பி என்று கூறி, அவருக்கு தைரியத்தை கொடுத்து தேற்றினார். தலைவர் வைகோவின் இந்த அன்பான அனுகுமுறை அந்த கேமராமேன் மட்டுமல்லாது அங்கு இருந்த அனைத்து பத்திரிக்கையாளர்களையையும் நெகிழ வைத்தது. தலைவரின் மனித நேயம் மிக்க செயல் எப்போதுமே போற்றுதலுக்குரியது.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment