Sunday, August 30, 2015

மாநாட்டுத் திடல் நோக்கிய சுடர் ஓட்டப் பயணத்திற்கான மாணவர்கள் பெயரை இன்றே பதிவு செய்ய மறுமலர்ச்சி மாணவர் மன்ற மாவட்ட அமைப்பாளர்களுக்கு மாநில அமைப்பாளர் சசி குமார் வேண்டுகோள்!

மொழிப்போர் தியாகி கீழப்பளுவூர் சின்னச்சாமி நினைவிடத்தில் இருந்து திருப்பூர் பல்லடம் நோக்கிய திராவிட இயக்க நூற்றாண்டு மற்றும் அண்ணா பிறந்தநாள் விழா சுடர் திருச்சியில் அவர் நினைவிடத்தில் இருந்து 12-09-2015 சனிக்கிழமை அன்று காலை எடுத்துச் செல்லப்படவிருக்கிறது.

கழக மாணவர் அணி சார்பில் எடுத்துச் செல்லப்படும் இந்த சுடர் ஓட்டத்தில் மறுமலர்ச்சி மாணவர் மன்றத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 50 ஐம்பது பேர் பங்குபெற வேண்டும். மொழிக்காக உயிர் நீத்த தியாகி கீழப்பளுவூர் சின்னச்சாமி நினைவிடத்தில் இருந்து எடுத்துச் செல்லப்படும் இந்த தொடர் சுடர் ஓட்டம் செப்டம்பர் 15 காலை அண்ணா பிறந்தநாள் விழா மாநாடுத் திடலை சென்றடையும்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த தொடர் சுடர் ஓட்டத்தில் திருச்சி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கெடுக்கலாம்.

மறுமலர்ச்சி மாணவர் மன்ற அமைப்பாளர்கள், இந்த சுடர் ஓட்டத்தில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பெயர், முகவரி மற்றும் பயிலும் கல்லூரி ஆகிய விவரங்களை முன்பதிவு செய்திடுங்கள்.

மறுமலர்ச்சி மாணவர் மன்றத்தின் மாவட்ட அமைப்பாளர்கள் உறுதியளித்த மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திடாத வகையில் மாணவர்களின் வருகையை இன்றைக்குள் உறுதி செய்திட வேண்டும் என மறுமலர்ச்சி மாணவர் மன்ற மாநில அமைப்பாளர் அன்பிற்குரிய இளவல், தலைவரின் கொள்கைகளை மாணவர் மன்றத்திலே விதைக்கும் வித்தகன் சசிகுமார் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள். ஏனென்றால் சுடர் ஓட்டத்திற்கான அனைத்து அனுமதிகளையும் மற்றும் அதற்கான ஏற்பாடுகளை செய்ய சில நாட்கள் தெவைப்படும். .

எனவே மாணவ செல்வங்களே உற்சாகமாக தங்கள் பெயரை மாவட்ட மறுமலர்ச்சி மாணவர் மன்ற அமைப்பாளர்களிடத்தில் உடனே பதிவு செய்யுங்கள். அதன் மூலம் மாவட்ட அபைப்பாளர்கள், மாநில அமைப்பாளர் சசிகுமார் அவர்களிடத்தில் ஒப்படைக்க வாய்ப்பாக இருக்குமென ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக அன்போடு கேட்டுகொள்கிறோம்.

மாணவர்களின் வருகையை பதிவு செய்திட நீங்கள் கீழ்காணும் அமைப்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

மணவை தமிழ்மாணிக்கம்
மாநில மாணவர் அணி துணைச்செயலாளர்
அலைபேசி : 9943603331

சசிகுமார்
மறுமலர்ச்சி மாணவர் மன்ற மாநில அமைப்பாளர்
அலைபேசி : 9942671930

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment