இன்று 21/08/2015 தேதி, சிவனடியார்களால் முன்பு "திருமுதுகுன்றம்" என்று அழைக்கப்பட்ட கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மதிமுக கழக தோழர் மனோகரன் அவர்களின் இல்ல திருமண விழா நடந்தது. இந்த நிகழ்வில் தமிழினத்தின் முதல்வர் வைகோ அவர்கள் மணமக்களுக்கு மாலை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி சார்பிலும் "மணமக்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க" என வாழ்த்துகிறோம்.
இதில் மதிமுக பொதுசெயலாளர் மாசில்லாமணி, செந்திலதிபன், வெளியீட்டு செயலாளர் வந்தயதேவன் மற்றும் கழக முன்னோடிகள் தொண்டர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.
தலைவர் வைகோ அவர்கள் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தந்த போது கடலூர் மாவட்டம் அண்ணாகிராம ஒன்றிய செயலாளர் சமூக சேவகர் அன்புக்குரிய அண்ணன் S.K.வெங்கடேசன் அவர்கள் தலைவர் வைகோ அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார்கள்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment