வேட்டி குறும்படம் வெளியீடு நிகழ்ச்சியானது இன்று மாலை சென்னை வடபழனி ஹெ.வி.எம் மஹாலில் நடந்தது. இதில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாகவே மதிமுக துணை பொது செயலாளர் அண்ணன் மல்லை சத்யா அவர்கள் வருகை தந்தார். அவரை இயக்குநர் கெளதமன் வரவேற்றார். பின்னர் தமிழருக்காக இன்று வரை போராடி வருகிற ஐயா நெடுமாறன் வருகை புரிந்தார். அடுத்ததாக வேட்டியின் நாயகன் ஓவியர் சந்தானம் அவர்கள் வந்தார்கள்.
தலைவர் வைகோ அவர்கள் வேட்டி குறும்பட சிறப்பு அழைப்பாளராக வருகை புரிந்தார்கள். பினர் வந்த உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் தலைவருடன் பேசிக்கொண்டிருந்தார்.
அனைத்து தலைவர்களும் குறும்பட வெளியீடு முடிந்த பின்பு மேடையில் அமர்ந்தார்கள். தூங்கும் புலியை படை கொண்டு எழுப்புவோம் என்ற தமிழ் வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. பின்னர் செஞ்சோலையில் பள்ளி மாணவ மாணவிகள் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தினார்கள் தலைவர்கள்.
வேட்டி குறுந்தகடு வெளியிடப்பட்டது. வேட்டி கதாநாயகனுக்கு மாலை மரியாதை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் வரிசையாக, இயக்குநர் கெளதமன், ஓவியர் சந்தானம் மற்றும் ஏனைய தலைவர்கள் உரையாற்றினர்.
தலைவர் வைகோ சிறப்புரைக்கு முன்னதாக வேட்டி பட இயக்குநர் கெளதமன் மற்றும் கதாநாயகன் ஓவியர் சந்தானம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். தொடர்ந்து பேசிய தமிழின முதல்வர் வைகோ அவர்கள் தலைவர் உரையில் நெருப்புப் பிழம்பு கிளம்பியது. "கிளிநொச்சிக்கு சென்று வந்ததாக டி.எஸ்.எஸ் மணி சொன்னார். அங்கு இளைஞர்கள் ஆவேசத்துடன் இருப்பதாக, எப்படி இல்லாமல் போகும்? புலிகள் சிந்திய இரத்தத் துளிகள், குருதிகள் காற்றிலே கலந்து அவர்களை இயக்கும்.
இப்பொழுது தமிழர்கள் நிலைமை 2008,2009 போலத் தான். வடக்கிலும்,கிழக்கிலும் சித்ரவதைகள் தொடர்கின்றது. இப்பொழுது வரவிருந்த தீர்மானம், நீர்த்துப் போன தீர்மானமாக இருந்தாலும், 2009 லிலே இராஜபக்சேவை பாராட்டித் தீர்மானம் போட்ட ஐநா மனித உரிமைக் கவுன்சில் இன்று ஒரு அடி முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அதையும் இந்திய அரசு தள்ளிப் போட்டிருக்கின்றது. அது முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியாக இருந்தாலும் சரி, இன்றைய தேசிய முற்போக்கு கூட்டணியாக இருந்தாலும் சரி.
தமிழகத்தில் புரையோடிப் போய் விட்ட ஊழலை, மதுவை, சாதிய வன்கொடுமைகளை ஒழிக்க அரசியல் கட்சிகளால் முடியாது. அது மாணவர்களால் தான் முடியும் என தலைவர் சிறப்புரையாற்றினார்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment