இன்று திருப்பூர் மாவட்ட மறுமலர்ச்சி இணையதள நண்பர்களின் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில், செந்தில்குமார், அறிவுக்கண்ணன், சுப்புராஜ், கெளரி சங்கர், பிராபாகர், அறிவுமாணிக்கம், திருப்பூர் ராஜா, ராஜாஜெர்லி, ஜெகதீஷ், ராபின், பிரியா கார்மென்ட்ஸ் செந்தில், முருகேசன், மயில்சாமி, ராஜாசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அண்ணா பிறந்தநாள் மாநாட்டு விளம்பரம் மற்றும் இணையதள நண்பர்களின் பங்களிப்பை பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.
இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு…
1. அண்ணா பிறந்தநாள் மாநாட்டை முன்னிட்டு சுவர் விளம்பரம் செய்வது என்றும்,
2. அண்ணா பிறந்தநாள் மாநாட்டு விளம்பரம் ஆட்டோக்களில் ஒரு மாதத்திற்கு திருப்பூர் முழவதும் செய்வது என்றும்,
3. இணையதள அணி சார்பாக அண்ணா பிறந்தநாள் மாநாட்டின் நோக்கத்தை வாகனப் பிரச்சாரத்தின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்றும்,
4. நெடுஞ்சாலைகளில் பிளக்ஸ் போனர் வைத்து அண்ணா பிறந்தநாள் மாநாட்டு விளம்பரம் செய்வது என்றும்,
5. திருப்பூர் முழுவதும் அண்ணா பிறந்தநாள் மற்றும் திராவிட இயக்க நூற்றாண்டு மற்றும் மதுவிலக்கை அமல்படுத்த இணையதள நன்பர்களின் சார்பாக துண்டறிக்கை அளித்தல் எனவும்,
6. அண்ணா பிறந்தநாள் மாநாட்டின் நோக்கத்தை வலியுறுத்தி இனையதள நண்பர்களின் சார்பாக டீ சர்ட் தயாரிப்பது என்றும்,
7. இணையத்தின் வாயிலாக மாநாட்டின் விழிப்புணர்வை அதிகபடுத்தல் என்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்து கொள்ள முடியாத நண்பர்கள் மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஒத்துழைப்பு நல்குமாறு இணையதள நண்பர்களின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment