நடைபெற இருக்கின்ற திராவிட இயக்க நுற்றாண்டு விழா, அண்ணா 107 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு வருகிற செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் திருப்பூர் பல்லடத்தில் பிரமாண்டமாக மதிமுகவினரால் நடத்தப்படுகிறது. இந்த திருப்பூர் மாநாட்டில் நடக்க இருக்கும் ஈழத்தில் இனக்கொலை பற்றிய புகைப்பட கண்காட்சிக்கு தலைவர் ஒரு குழுவை நியமித்திருந்தார். அந்த குழுவினரின் கலந்துரையாடல் இன்று தாயகத்தில் அண்ணன் கழக குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஈழத்தில் இனக்கொலை பற்றிய புகைப்பட கண்காட்சி குழுவின் கழக குமார், ஆசைத்தம்பி, சசி குமார், பாலாஜி, அம்மாபேட்டை கருணாகரன், வைகோ கார்த்திக் ஆகியோர் பங்கேற்று கண்காட்சியை எவ்வாறு நடத்துவது என பல்வேறு ஆலோசனைகளை நடத்தினர்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment