தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் திரு. ஜோயல் அவர்கள் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெற்கு மண்டலத்தில் திருவைகுண்டம் அணையைத் தூர்வாரக் கோரி வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அணையைப் போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என்றும், 15 நாள்களுக்கு ஒருமுறை தூர் வாரப்பட்ட நிலை குறித்து ஓர் அறிக்கையைப் பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்திரவிட்டனர்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நாளை 24.08.2015 காலை 10 மணிக்கு சென்னை, அரும்பாக்கத்தில் அமைந்துள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தெற்கு மண்டல நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தீர்ப்பாயம் விசாரணையில், திருவைகுண்டம் அணையைத் தூர்வாருவதைப் போலவே தேனி மாவட்டம் வைகை அணை, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணை, சேலம் மாவட்டம் மேட்டூர் அணை மற்றும் திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை ஆகியவையும் தூர் வாரப்படும் என தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த வைகோ அவர்கள், தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளதை மனதாரப் பாராட்டுவதாக செய்தியாளர்களிடத்தில் தெரிவித்தார். மேலும் அணைகளைத் தூர் வாருவதைப்போலவே குளங்களைத் தூர் வாரும் பணிகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
No comments:
Post a Comment