Wednesday, August 26, 2015

மறுமலர்ச்சி மாணவர் மன்ற மாவட்ட அமைப்பாளர்களுக்கு சசிகுமார் அழைப்பு!

திருப்பூரில் செப்டம்பர்  15 இல் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு மற்றும் திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு, மொழிப்போர் தியாகி கீழப்பளுவூர் சின்னச்சாமி நினைவிடத்திலிருந்து, மாநாட்டு திடல் வரைக்கும் திராவிட இயக்க நூற்றாண்டு சுடர் ஓட்டம் கழக மாணவரணி சார்பில் நடைபெற உள்ளது. 

அதற்கான கலந்தாய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை 28 ம் தேதி திருச்சி அருண் ஹோட்டலில் நடைபெற உள்ளது. திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் அண்ணன் வெல்லமண்டி சோமு மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர் அண்ணன் டி.டி.சி.சேரன் ஆகியோர் தலைமையில், கழக மாணவரணி செயலாளர் அண்ணன் திமு.ராசேந்திரன் கருத்துரையும், ஆலோசனையும் வழங்க உள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் மாணவரணி அமைப்பாளர்கள், மறுமலர்ச்சி மாணவர் மன்ற அமைப்பாளர்கள் தவறாமல் அவசியம் பங்கேற்க வேண்டும்.

குறிப்பு : இந்நிகழ்விற்கு மேற்குறிப்பிட்ட மாவட்டங்களின் மறுமலர்ச்சி மாணவர் மன்ற அமைப்பாளர்கள் அவசியம் பங்கேற்று, ஆலோசனைகளைப் பெற்று சுடர் ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்திட ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன். 

தகவல் : அண்ணன் மணவை தமிழ்மாணிக்கம்


மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment