Sunday, August 16, 2015

மத்திய சென்னை பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் வைகோ உரையாற்றினார்!

மதிமுக மத்திய சென்னை மாவட்டப் பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று (16.08.2015 ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை, தியாகராயர் நகர், செவாலியே சிவாஜிகணேசன் சாலையில் உள்ள முருகன் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. 

தலைவர் வரும்போதே மாநில மகளிரணி துணைசெயலாளர் அன்பு சகோதரி மல்லிகா தயாளன் அவா்கள் ஏற்பாட்டில் கழக கொடி ஏற்றினாா் தலைவர் வைகோ.

தலைவர் வைகோ அவர்கள் வருகைக்காக "மேளதாளங்கள் முழங்க" தொண்டர்கள் காத்திருந்தர்கள்.

அனைத்து தலைவர்களும் மேடையில் அமர்ந்தனர். பின்னர் குனிசை முருகன் அவா்கள் மறைவுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது அனைவரும் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த மத்திய சென்னை மாவட்ட பொது உறுப்பினா்கள் கூட்டத்தில் தலைவா் வைகோ உரை நிகழ்த்தினார். அப்போது நிலம் பதமாக இருக்கிறது. விதைத்தால் முளைக்கும். வாருங்கள் விதைப்போம். அமோக விளைச்சல் கிடைக்கும். அறுவடை அடுத்த ஆண்டில் செய்யலாம் என பேசி தொண்டர்களுக்கு உணர்ச்சிமிக்க உற்சாகமூட்டினார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் அக்கா அப்பலோ குமாி விஜயகுமாா் அவா்கள் திராவிட இயக்க கருத்து பட்டறையில் கலந்துகொள்ள வந்த இளைஞா்களிடம் விண்ணப்ப படிவம் பெற்றுக்கொண்டாா். 


மத்திய சென்னை மாவட்டம் சாா்பாக நண்பா் சுரேஷ் பாபு அப்பன்துரை அவா்கள் திராவிட இயக்க கருத்து பட்டறையில் பங்கேற்க விண்ணப்ப படிவம் அண்ணன் தி மு இராஜேந்திரன் 

மணவை தமிழ்மாணிக்கம் ரெட்சன் அம்பிகாபதி ஆகியோா் முன்னிலையில் வழங்கினார்கள்.


திராவிட இயக்க கருத்து பட்டறையில் கலந்து கொள்ள இன்று தாயகத்தில் அண்ணன் ஈஸ்வரன் அண்ணன் தி மு இராஜேந்திரன் அண்ணன் மணவை தமிழ்மாணிக்கம் ஆகியோா் முன்னிலையில் விண்ணப்பத்தை வைகோ கார்த்திக் வழங்கியபொழுது துரை தங்கா அவா்கள் உடனிருந்தாா்.


இந்நிகழ்வில், மல்லை சத்யா, மல்லிகா தயாளன், குமரி விஜயகுமார், அம்பிகாபதி, ஈஸ்வரன், திமு ராஜேந்திரன், இணையதள அணியின் திருப்பதிசாய் வைகோ கார்த்திக் உள்ளிட்ட ஏராளமான தொன்டர்கள் கலந்துகொண்டனர்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்










































No comments:

Post a Comment