கோவை மாநகர் மாவட்டம் 8-வது பகுதி கழகத்தின் துணை செயலாளர் (மகளிர் ) திருமதி மும்தாஜ் அவர்களின் கணவரும் தலைமை கழக பேச்சாளருமான வி.கே.எம். ஷாஜஹான் அவர்கள் தனது ஆட்டோவில் மதுவை ஒழிக்க பாடுபடும் மதிமுகவின் சேவையை பற்றியும், குடியை ஒழித்து குடும்பத்தை காப்பது பற்றியும், தன்து கழகத்தின் நேர்மையை நிலைநாட்டும் விதத்தில் நானும் நேர்மையாளன் என ஆட்டோவின் கட்டண விபரத்தையும் பிபுறத்தில் பிள்க்ஸ் வரைந்துள்ளார்.
மேலும் ஆட்டோவின் பக்கவாட்டில் நடைபெற இருக்கின்ற செப்டம்பர் 15 திராவிட இயக்க நூற்றாண்டு விழா மற்றும் அண்ணா 107 ஆவது மாநாட்டு விளம்பரத்தையும் வரைந்து வைத்து கழக பணியாற்றுகிறார். அன்னாருக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் அண்ணன் சாஜஹான் அவர்கள் கழகத்தில் பெரிய பொறுப்புக்களை அடையவும், தொடர்ந்து கழகத்திற்கான பணிகளை முன்னெடுக்கவும் வேண்டுகிறோம்.
மதிமுக இணையதள அணி -ஓமன்
No comments:
Post a Comment