ஆந்திராவில் இருபது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட்தற்கு, ஆந்திர மாநில அரசையும், தமிழக அரசையும் கண்டித்து மக்கள் நலம் காக்கும் கூட்டமைப்பின் "மாபெரும் உண்ணாநிலை அறப்போர்" தற்போது வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்று வருகிறது.
அறப்போராட்டம் தொடங்குவதற்கு முன்னர் தமிழின முதல்வர் வைகோ அவர்கள், தோழர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் தோழர் முத்தரசன் ஆகியோர் கலந்துரையாடினர்.
பாதிக்கப்பட்ட இருபது தமிழர் குடும்பங்கள் உண்ணாவிரதத்திற்கு வருகை தந்தனர். அவர்களுக்கு தனியாக இருக்கை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
தலைவர் வைகோ அவா்களின் முன்னுரையுடன் 20 தமிழர் படுகொலை தொடர்பான நீதி விசாரணை வேண்டி உண்ணாவிரத அறப்போர் துவங்கியது.
அனைத்து தலைவர்களுக்கும் பொறுப்பை சமமாக பகிர்ந்து அளித்தார் தலைவர் வைகோ. தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ராமகிருஷ்ணன் உரையாற்றினார். அடுத்த கட்ட போராட்டம் போளூரில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்ட்து.
பின்னர் பேசிய இயக்குர் கௌதமன், இருபது தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை விவரித்து பேசினார். பாதிக்கப்பட்ட குடும்பத்தோடு போராடிய போது எங்களுக்கு உறுதுணையாக இருந்தது ஐயா வைகோ அவர்கள்தான். எப்போதுமே தொடர்பு கொண்டு ஆலோசனைகள் சொல்லி கோண்டே இருந்தார்கள் என இயக்குநர் கௌதமன் தெரிவித்தார்.
அப்போது உண்ணாவிரத பந்தலுக்குள் மக்கள் இருக்கும் இடம் நோக்கி நடந்து 20 தமிழர்களின் குடும்பம் இருக்கும் இடம் நோக்கி வந்தார் தலைவர் வைகோ. அச்சமயம் பாதிக்கப்பட்ட இருபது குடும்பத்தினா் கண்ணீருடன் கோரிக்கை மனு அளித்து தமிழின முதல்வர் வைகோவிடம் முறையிட்டார்கள்.
தொடர்ந்து உடல் முடியாத நிலையிலும் உணர்வாய் கலந்து கொண்டு வீர.சந்தானம் அவர்கள் முழக்கமிட்டார். அவரை தொடர்ந்து இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் உரை நிகழ்த்தினார்.
இன்னிலையில் ஊடகயியலாளர்கள் பேட்டியெடுத்தனர். அப்போது ஆந்திர காவல்துறை தமிழர் படுகொலை பற்றி விசாரிக்க கூடாது என தெரிவித்தார் தமிழின முதல்வர் வைகோ. 49 பேரை என்கவுண்டர் செய்த உயர் அதிகாரியை கொண்டு விசாரணை செய்வதா. தமிழகத்திலேயை FIR போடலாம். குற்றவாளிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் நீதி பாதுகாப்பு கிடைக்கும் வரை போராடுவோம் என்றார் வைகோ.
மமக இணை பொது செயலாளர் உரை நிகழ்த்தினார். திரு. ஜவாஹிருல்லா அவர்கள் வருகை தந்தார். அப்போது தலைவர் அவர்கள் ஜவாஹிருல்லா அவர்களை மாமா வாங்க என அன்பாக வரவேற்றார். அனைவரும் இப்படிபட்ட மாண்பை போற்றுகின்ற தலைவரை பார்த்து வியந்தனர்.
தொடர்ந்து புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஸ்ணசாமி வருகை தந்தார். அவரையும் தலைவர் வைகோ வரவேற்று மேடையில் அமர வைத்தார்.
பல தலைவர்கள் ஒருவரையொருவர் தொடர்ந்து உரையாற்றி வருகின்றனர். உண்ணாவிரத பந்தல் நிரம்பி வழிகிறது. இப்போதைய நிலவரத்தில் கட்டுக்கடங்கான கூட்டம் காணப்படுகிறது. இந்த உண்ணாவிரத பந்தலில் மத்திய சென்னை மாவட்ட செயலாளா் அண்ணன் ரெட்சன் அம்பிகாபதி, காஞ்சி மாவட்ட செயலாளா் அண்ணன் பாலவாக்கம் க சோமு, ஆபத்துதவி செயலாளா் அண்ணன் பூவை து கந்தன், ஜீவன், கழக குமார், முராத் புஹாரி ஆகியோர் உண்ணாவிரத பந்தலில் இருந்தனர். அவர்களுடன் உண்ணாவிரத பந்தலில் இணையதள தோழர்களான வைகோ கார்த்திக், திருப்பதிசாய், நல்லு லிங்கம், அம்மாபேட்டை கருணாகரன் மற்றும் முக்கிய கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment