கடந்தவாரம் மதுவுக்கெதிராக உண்ணாவிரத போராட்டக்களத்தில் மாற்றுதிறனாளிகள் ஈடுபட்டனர். அப்போது தலைவர் வைகோ அவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்ததோடு நீங்கள் இங்கே கஸ்டபடுவதை பார்க்க முடியவில்லை. நீங்கள் வேண்டுமென்றால் மதிமுக தலைமை கழகமான தாயகத்தில் வந்து உங்கள் உண்ணாவிரதத்தினை தொடருங்கள் என அன்போடு கேட்டுக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் நாங்கள் இங்கே உண்ணாவிரதத்தை தொடருகிறோம் என தொடர்ந்தனர். ஆனால் தலைவர் உங்களுக்கு தாயகம் எப்போதுமே திறந்திருக்கிறது என்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். அவர்கள் அனைவரும் சந்தோசத்தில் நிறைந்தனர்.
அதே நாளில் மாற்றுதிறனாளிகளுக்கு ஆதரவாக திரு.சுப.உதயகுமார் அவர்களும் தனது ஆதரவினை தெரிவித்திருந்தார். பின்னர் சுப உதயகுமார் அவர்கள் தலைவர் வைகோவுடன் பேசிக்கொண்டார்.
சுப உதயகுமார் அவர்கள் கூடங்குளம் அணு உலைக்கெதிரான இயக்கத்தில் அணு உலையே கூடாது என பல வருடங்களாக இடிந்தகரை மக்களுடன் சேர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment