மது ஒழிப்பு போராளி காந்தியவாதி சசிபெருமாள் மரணம் குறித்து வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக்கொண்ட வைகோ ஏற்கனவே அவரின் இறப்பு குறித்து ஆராய சசிபெருமாள் இறந்த பகுதியான குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த உண்ணாமலைகடைக்கு சசி பெருமாள் இறந்த அந்த அலைபேசி கோபுரம் இருக்கும் இடத்திற்கு 28 ஆகஸ்டு காலை சென்று அங்குள்ள பொதுமக்களிடமும் கலந்துகொண்ட தலைவர்கள், அப்பகுதி பஞ்சாயத்து நிர்வாகிகளிடம் நேரடியாக வழக்கு விசாரணக்கு தேவையான தகவல் சேகரித்திருந்தார்.
இன்றுள்ள வழக்கு விசாரணைக்கு தலைவர் உயர்நீதிமன்றத்தில், சசிபெருமாள் வழக்கிற்காக மதியம் வந்தார். வரும்போதே பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டு நில மசோதா தொடர்பாக கேட்டனர். அப்போது தலைவர் வைகோ அவர்கள் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவருக்கு இன்று கடிதம் எழுதி இருக்கிறேன் என தெரிவித்து நீதிமன்றத்திற்குள் சென்றார்.
மதியம் 2.15 மணி அளவில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அபோது தலைவர் வைகோ அவர்கள் மரணம் குறித்த தெளிவான சாட்சியங்களை எடுத்து வைத்தார். தலைவர் சமர்பித்த சாட்சிகளுக்கு பதில் தர இரு வார காலம் அவகாசம் வேண்டுமென அரசு தரப்பு கேட்டதற்கிணங்க வழக்கு 25-9-15 அன்று தள்ளி வைக்கபடுகிறது.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment