காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்பதூர் வல்லக்கோட்டையில் திராவிட இயக்க கருத்துப்பட்டறையானது இன்று காலை தொடங்கியது. இந்த கருத்தியக்க வகுப்பானது 22-08-2015 முதல் 22-08-2015 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று காலையிலேயே தொண்டர்கள் வந்துவிட்டனர். பின்னர் தலைவா் வருகைக்காக காத்திருந்தார்கள்.
அப்போது கழகத்தின் அரசியல் ஆய்வு மையச்செயலாளர் அண்ணன் மு.செந்திலதிபன் அவர்கள் வந்தார்கள். அவருடன் அவர் மகன் செ.பிரபாகரன் வந்திருந்தார். அவர்களுடன் கழக வெளியீட்டு செயலாளர் அண்ணன் ஆ.வந்தியத்தேவன், மதிமுக மாநில மாணவரணி துணை செயலாளர் மணவை அ.தமிழ்மாணிக்கம் ஆகியோர் வந்தனர்.
தலைவர் வைகோ அவர்கள் வந்தார்கள். திருப்பெரும்புதூர், வல்லக்கோட்டையில் திராவிட இயக்கப் பயிற்சிப் பட்டறை நிகழ்வு தொடங்கியது. பயிற்சிப் பட்டறையில் காஞ்சி மாவட்டச் செயலாளர் அண்ணன் பாலவாக்கம் சோமு உரையாற்றினார்.
தமிழால் எல்லாம் முடியும்! என்ற தலைப்பில் கருத்துப்பட்டறையில் பட்டிமன்ற மாபெரும் பேச்சாளர் அரங்கநெடுமாறன் கருத்துரை வழங்கினார்கள். வள்ளுவர் குறள்வழி ஒழுக்கத்தின் இமயமாய் இருக்கும் ஒரே அரசியல் தலைவர் எங்கள் தலைவர் வைகோ என கருத்துப்பட்டறை நிகழ்வில் ஐயா அரங்கநெடுமாறன் எழுச்சி உரை நிகழ்த்தினார். அப்போது கரவொலியால் அரங்கமே அதிர்ந்தது.
பின்னர் தமிழின முதல்வர் மதிமுக பொதுச்செயலாளர், திராவிட இயக்கத்தின் கடைசி கையிருப்பு தலைவர் வைகோ அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அப்போது பேசிய தலைவர், ஹன்றி திபேனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும் அவர் இயக்கத்தை சேர்ந்த ஒரு மகளிரை இந்த கருத்து பட்டறைக்கு அனுப்பியது அவரது கடமை உணர்ச்சியை காட்டுகிறது என்று அவரை பாராட்டினார்.
ஆந்திராவில் இருபது தமிழா்கள் கொல்லப்பட்டதை கண்டித்து வரும் 26ம் தேதி மக்கள் நலன் கூட்டு இயக்கம் சார்பாக நடக்கவிருக்கும் உண்ணாவிரத அறப்போராட்டத்துக்கு படுகொலை செய்யபட்ட அந்த 20 தமிழா்களின் குடும்பத்தார்கள் கலந்து கொள்கின்றனா் என்று தலைவா் தெரிவித்தார்.
ஆந்திர அரசு படுகொலை செய்த 20 தமிழா்கள் விவகாரத்தில் தன்னுடைய 25 ஆண்டு கால நண்பணான சந்திரபாபு நாயுடுவையும் சோ்த்து சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார் வைகோ. நண்பன் தவறு செய்தால் அவரும் தண்டிக்கபடவேண்டும் என சுய நலம் பாராமல் போராடுபவர் வைகோ. தமிழக அரசியலில் இன்றுவரை மக்களுக்காக, மக்களின் போராட்டங்களுக்காக, அவர்களின் வாழ்வாதாரங்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே தலைவா் வைகோ அவா்களே!
மேலும் பேசும்போது தலைவருடைய பிறப்பு பெயரான வை.கோபால்சாமி என்ற பெயரை ஒரு கலந்தாய்வில் வைகோ என முதலில் மாற்றியவர் கலைஞர்தான் என குறிப்பிட்டார். ஆனால் பின்னர் கலைஞர் அதை விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். ஆனால் அதை தினகரன் கே.பி.கே அவர்கள் தினகரனில் அச்சேற்றினார். 1996க்கு பிறகு என் அன்னையிடம் அனுமதி வாங்கி பின்பு வைகோ என கெஜட்டில் மாற்றினேன் என இன்றைய கருத்து பட்டறையில் தெரிவித்தார் வைகோ.
2014 விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் மதிமுக தோற்றாலும் விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றது மதிமுக தான். 370 வாக்குகள் முன்னணி பெற்றது மதிமுக என தெரிவித்தார் தலைவர்.
1989 சிவகாசி பாராளுமன்ற தேர்தலில் முதல் நிதியை என் வீட்டிற்கே வந்து தன் மாத சம்பளத்திலிருந்து 2000 ரூபாய் ஒருவர் வழங்கினார். அதை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறேன். அவர் யார் தெரியுமா! இதோ இந்த கருத்து பட்டறையை சிறப்பாக நடத்தும் காஞ்சி மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு அவர்கள்தான் என்றார் தலைவர் உணர்ச்சிகரமாக. இவ்வாறு ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டு மதிய இடைவேளைக்கு வழி தந்தார் தலைவர் வைகோ.
செவிக்கு கருத்துக்களை ஏற்றவர்கள் வயிற்றுக்கும் பசியாற்ற உணவிட்டார்கள். அருமையான உணவை தந்து மகிழ்வித்திருந்தார் பாலவாக்கம் சோமு தலைமையிலான அணியினர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலே கருத்துக்களை திறம்பட பகிரும் வைகோவின் வானம்பாடி திரு.அந்தரிதாஸ் மற்றும் திரு.காரை.செல்வராஜ் அவர்கள் கருத்துப் பட்டறையில் பங்கேற்றிருந்தார்கள்.
மதிய உணவு வேளையின் பின்னர் கருத்து பட்டறையில் மதிய நிகழ்ச்சிகள் அண்ணன் மணவை தமிழ் மாணிக்கம் அவர்கள் உரையாற்றினார்.
திராவிட இயக்கம் நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் கழக வெளயீட்டு செயலாளர் அண்ணன் திரு. வந்திய தேவன் அவர்கள் கருத்துரை வழங்கினார்கள். திராவிட இயக்கம் நமக்கு தந்த பயன்களை பட்டியலிட்டு பேசினார் அண்ணன் வந்தியத் தேவன் அவர்கள்.
மருத்துவ கல்லூரிகளில் சமஸ்கிருதம் தெரிந்தால்தான் விண்ணப்பம் போட முடியும் என்ற நிலையை மாற்றியது திராவிட இயக்கங்கள்தான். இறப்பில் கூட சாதி பார்த்தது போன்றவை திராவிட இயக்கங்களால்தான் மாற்றப்பட்டது.
திராவிட இயக்கம் தழைத்ததினால்தான் இன்றைய அரசியல் தலைவர்களின் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் இல்லாமல் இருக்கிறது. ஆனால் முன் அரசியல் காலங்களில் அப்படி இல்லை எனவும் தெரிவித்தார் அண்ணன் வந்தியத்தேவன்.
அப்துல் கலாம் அவர்களை தரையில் உட்கார வைத்து சந்தித்தவர் காஞ்சி சங்கராச்சாரியார். அது போல முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களை தீட்டு கழிக்க நடுவில் தண்ணீர் தொட்டி வைத்து சந்தித்தவர் அன்றைய சங்கராச்சாரியர் எனவும் குறிப்பிட்டு பார்ப்பனியத்தை விளக்கினார் அண்ணன் வந்தியத்தேவன்.
2004 நடைபயணத்தின் இடையில் ஈரோட்டிலிருந்து இட ஒதுக்கீடு மசோதாவிற்கு டெல்லி சென்று வாக்களித்தார் தலைவர் வைகோ. ஆனால் திமுக எம்பிக்கள் டெல்லியிலேயே இருந்தாலும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.
பின்னர் மாலை வேளை கருத்தப்பட்டறையில் வழக்கறிஞர் அஜிதா அவர்கள் கருத்துரை வழங்கினார்கள்.
"மொழிப்போர்" ஏன் என்ற தலைப்பில் கழகத்தின் அரசியல் ஆய்வு மைய செயலாளர், மு.செந்திலதிபன் அவர்கள் உரையாற்றினார். தமிழ்மொழியின் தொன்மை, தமிழர்களின் பெருமை, ஆதிக்க இந்தியை ஏன் எதிர்க்க வேண்டுமென, ஆதாரங்கள் காட்டி பேசினார். அவரின் பிரமிப்பான உரையில் மாணவர்கள் கண்ணசைக்காமல் செவிசாய்த்து கேட்டுக்கொண்டிருந்தனர்.
கடைசியாக தலைவர் வைகோவுடன் மாணவ மாணவிகள் தங்களை ஒவ்வொருவராக அறிமுகம் செய்தனர். பின்னர் பலத் துறைகளில் பயின்றோர் திராவிட இயக்க கருத்துப் பட்டறையில் மேலும் பட்டை தீட்டப்படுவதை தமிழின முதல்வர் வைகோ அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பூரில் செப்டம்பர் 15 ல் நடைபெறுகின்ற அறிஞா் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு நிகழ்வில் ஈழத்தில் இனக்கொலை புகைப்பட கண்காட்சி குழுவில் அன்புக்குரிய சகோதரன் கார்த்திகேயன் (வைகோ கார்த்திக்) அவர்களை பணியாற்ற வாய்ப்பளித்ததற்காக தமிழின தலைவா் வைகோ அவா்களை சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டார்.
செய்தி சேகரிப்பு: வைகோ கார்த்திக், கருணாகரன்
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி – ஓமன்
No comments:
Post a Comment