தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கோரியும், தமிழக அரசின் அராஜக போக்கைக் கண்டித்தும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டமானது ஆகஸ்டு 20 ஆம் தேதி மாலை 6.30 மணி அளவில் நாகர்கோயில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் நடைபெற இருக்கிறது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு மதிமுக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் அ.ஜெயராஜ் தலைமை தாங்குகிறார். மதிமுக துணை பொதுச்செயலாளர் வைகோவின் வலதுகரம் மல்லை சத்யா அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.
மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்தின் கட்சிகளான, கம்யூனிஸ்டுகள், விடுதலி சிறுத்தைகள், மமக ஆகிய கட்சிகள் கலந்துகொண்டு தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.
இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் கழக கண்மணிகள் ஏராளமானோர் கலந்துகொள்ளவேண்டுமென்றும், மக்கள் கூட்டியக்க கட்சிகளும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமென்றும் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு கேட்டுகொள்கிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment