உலக பொதுமறையாம் திருக்குறளை அரபு தேசத்திலே அதுவும் இஸ்லாம் மார்க்கத்தின் தலைநகராக விளங்கும் சவுதி அரேபியாவிலே தன்மான தமிழன் முனைவர் ஜாகிர் உசேன்ரபு மொழியிலே அறிமுகப்படுத்தி வெளியிட்டுள்ளார்கள். இது கடந்த ஏப்ரல் மாதத்திலே வெளியிடப்பட்டுள்ளது. அந்த தமிழனின் உணர்வை நாம் அனைவரும் மதிக்க வேண்டும். தமிழ் உலகம் முழுதும் தழைக்க பாடுபட வேண்டும். தமிழனுக்கென்று ஒரு நாடு உருவானால் அது தமிழீழமாக மலரும்போது புலிக்கொடி ஐக்கியநாடுகள் சபையை அலங்கரிக்கும்போது தமிழ் உச்சாணியில் எட்டப்பட்டிருக்கும்.
அப்படிபட்ட தமிழை உலகிற்கு வெளிப்படுத்திய திருக்குறளை அரபு நாட்டில் வெளியிட்ட முனைவருக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துக்கள் காலம் கடந்தாலும், தமிழர்களின் இதயத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த வாழ்த்து.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment