வெளிநாட்டில் இருந்து பல லட்சம் டாலர் பணம் மதிமுகவிற்கு பரிசாக வந்தது. அனுப்பியவர் யாரென்றே தெரியாது என பெரோ, பெமோ வழக்குகளை சந்தித்த ஊழல் ராணி ஜெயாவின் அடிப்பொடிகள் கூறுயது. ஆனால் அதற்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக மதிமுகவின் நேர்மையை இந்த கடிதம் மூலம் கூன்பாண்டி அமைச்சரவை கூட்டத்தினர் தெரிந்துகொள்ளலாம்.
2013 ஆம் ஆண்டு கழக வளர்ச்சி நிதி-தேர்தல் நிதிக்காக பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தது மதிமுக. அந்த கோரிக்கையை பார்த்த வெளிநாடு வாழ் மதிமுக பற்றாளர் ஒருவர் பண விவரத்தினை குறிப்பிட்டு காசோலை ஒன்றை தாயகத்திற்கு அனுப்பியிருந்தார். அதை அறிந்த கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் தமிழ் மறவன் அவர்கள் அரசியல் கட்சிகள் வெளிநாட்டிலிருந்து பணம் பெறுவது தடைசெய்யப்பட்டுள்ளதையறிந்து அந்த காசோலையை திரும்ப அனுப்பி, அதை அனுப்ப முன்வந்தவருக்கு நன்றியும் தெரிவித்திருந்தார் என்பது ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால் இவையனைத்தையும் அறிந்த கூன்பாண்டிகள் கூக்குரலிடுகின்றனர். இதிலிருந்து மதிமுகவின் கோட்பாடுகளை கடைபிடிக்க மதிமுகவின் முன்னோடிகளோ தொண்டர்களோ என்றைக்குமே தவறியதில்லை என்பதை இப்போதாவது தெரிந்துகொள்ளுங்கள் முதுலெலும்பில்லாத அடிமை அமைச்சர்களே.
மக்களுக்காக சேவை செய்யவே மதிமுகவினர் கடந்த 22 வருடங்களாக செயல்பட்டு வருகின்றனர். மதிமுகவினர் மீது யாரும் விரல் நீட்டி குறை கூற முடியாதவாறு தலைவர் வைகோ அவர்கள் இயக்கத்தை கட்டி காத்து வருகிறார். தொண்டர்களையும் அவ்வாறே வார்ப்பித்தும் வருகிறார். இந்திய அரசியல் வரலாற்றில் கொள்கை படி நடக்கின்ற ஒரே அரசியல் கட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், கட்சி தொடங்கிய 23 வருடமாக அதை செயல்படுத்தி வருகிறது என்பதை பொம்மை அடிமை உறுப்பினர்களுக்கு சுயநினைவில்லாமல் இருப்பதால் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
எனவே இது போன்ற ஆதாரமற்ற போலியான குற்றம் சாட்டினால், எங்களை வைத்து அரசியல் ஆதாயம் தேட முற்பட்டால், எங்களை மேலும் சீண்டினால் புலிகள் பதுங்கிதானே இருக்கிறார்கள் பாயமாட்டார்கள் என தப்பு கணக்கு போட்டால், பாய தொடங்குவோம் பின்னர் அகிலமே அரளும்படியாகிவிடும் என எச்சரிக்கிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment