குமரி மாவட்டம் உண்ணாமலைகடை பகுதியில் மதுவிற்கு எதிராக பொராடிக்கொண்டிருந்த சசிபெருமாள் அவர்கள் போராட்டக்களத்திலே உயிர் நீத்தார். இந்த மரணச் செய்தி அறிந்த மதிமுக பொதுசெயலாளர், தமிழின முதல்வர் வைகோ அவர்கள் திருநெல்வேலியிலிருந்து விரைந்து வந்து முதன்முதலில் சசிபெருமாள் அவர்கள் உடலைப் பார்த்தார்.
அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தியவுடன், சசிபெருமாள் மரணமடையவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று அறிவித்தார் வைகோ.
செல்போன் கோபுர உச்சியில் மயங்கிய சசிபெருமாள் அவர்களை இறக்குகிறோம் என்று கழுத்திலும் வயிற்றிலும் கயிற்றைக் கட்டி இறுக்கியதால்தான் அவர் உயிரிழந்திருக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.
விதிகளுக்குப் புறம்பாக, இரவு நேரத்தில் சசிபெருமாள் அவர்களது பிரேதப்பரிசோதனையை நடத்தி உண்மையை மூடி மறைக்க அரசு முயன்றதைத் தடுத்துநிறுத்தி பகலில் பரிசோதனை நடைபெறவும், வீடியோ எடுக்கவும் ஏற்பாடு செய்தார்.
பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்று வெளியானதை அடுத்து, சசிபெருமாளின் மரணம் தூக்கு மாட்டியதால் ஏற்படும் மரணம்போல் உள்ளது என்ற உண்மையை மறைக்கும் வகையிலான, மழுப்பலான அறிக்கையை தமிழக அரசு அளித்துள்ளது.
இதன்மூலம் கயிறு இறுக்கியதால்தான் சசிபெருமாள் அவர்கள் மரணமடைந்தார் என்பதும், இது அப்பட்டமான படுகொலை என்பதும் நிரூபணம் ஆகியுள்ளது.
எனவே இந்த படுகொலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை புலனாய்வுதுறை விசாரித்து, உண்மையை கண்டறிந்து குற்றவாளிகளை சிறைப்படுத்தவேண்டுமென்று ஓமன் இணையதள அணி சார்பில் கேட்டுகொள்கிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment