மும்பை மதிமுக சார்பாக கழகத்தின் ஆலோசனை கூட்டம் காட்கோபர் காமராஜ் நகரில் வைத்து மாலை 3 மணி அளவில் நடைபெற்றது. இதில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, புதிய கிளைகள் திறப்பது பற்றி மும்பை ம.தி.மு.க அமைப்பார் செ.தமிழழகன் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மதுவிலக்கு போராளி மாவீரர் சசிபெருமாள் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகச்சியில் கிளை கழக செயலாளர் வா.ம.சுதேஷ், அ.சுப்ரமணியன், ர.பாலகிருஷ்ணன், வேலு, புலிபாண்டி, சுப்பையா, க.வேல்முருகன், ராமு மற்றும்அனைத்து கிளை கழக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
மறுமலர்ச்சி திமு கழகத்தை தமிழகம் மட்டுமல்லாமல் மும்பையிலும் சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கும் மும்பை கழக நிர்வாகிகளை ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவிப்பதோடு, கழகத்தை மேலும் வளர்க்க உறுதுணையாக இருந்து முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்ல வாழ்த்துதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment