தமிழகத்தின் காவிரி தீரத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் மற்றும் இராமநாதபுரம், சிவகங்கை, அரியலுர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் நாசகார மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முனைந்துள்ளது.
தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசனோடு
மத்திய அரசு செய்த ஒப்பந்தத்தை இரத்து செய்ததாக அறிவித்தாலும், மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் மூலம் மறைமுகமாக செயல்படுத்த மத்திய அரசு முனைந்துள்ளதால், அதனைத் தடுப்பதற்காக காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அதனுடைய ஒருங்கிணைப்பாளர் வைகோ தலைமையில் நாளை ஆகஸ்ட் 2 ஆம் தேதி காலை 11 மணிக்கு தஞ்சாவூரில் ஏற்பாடு செய்திருந்தa அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், தமிழ் உணர்வு அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம், காந்தியவாதியும், மது ஒழிப்புப் போராளியுமான சசிபெருமாளின் துயர மரணத்தால் ஏற்பட்டுள்ள நிலமையைக் கருதி ஒத்திவைக்கப்படுகிறது.
அறிவிக்கப்பட்ட காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூரில் நடைபெறும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அறித்துள்ளார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment