Wednesday, September 30, 2015

கரூர் மாவட்ட நகர பொறுப்பாளர்கள், பொறுப்பு குழு நியமனம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை கழகமான தாயகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கரூர் மாவட்ட, கரூர் நகர பொறுப்பாளர்கள் மற்றும் குளித்தலை நகர பொறுப்புகுழு நியமனம் செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே கழக தோழர்கள் அனைவரும் புதியதாக நியமிக்கப்பட்டவர்களுடன் இணைந்து கழக பணியாற்றி கழகத்தை உயர்நிலையை அடைய செய்ய ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்புடன் வேண்டுகிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

திரு.தேபிபிரசாத்புருஷ்டி அவர்கள் சென்னை வந்தடைந்தார்!

தமிழின முதல்வர் வைகோ அவர்கள் தலைமையில் நாளை நடைபெற இருக்கும் நேதாஜி பேசுகிறார் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள திரு.தேபிபிரசாத்புருஷ்டி அவர்கள் சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

அவரை மத்தியசென்னைமாவட்ட செயலாளர், ரெட்சன் C.அம்பிகாபதி விமான நிலையத்தில் சால்வை அனிவித்து வரவேற்றார். உடன் ஆயிரம்விளக்கு பகுதி செயலாளர் வழக்கறிஞர் T.J.தங்கவேலு.


செய்தி சேகரிப்பு: இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன் முகநூல்

மதிமுக இணையதள அணி - ஓமன்

நைட்டிங்கேல் விருது வழங்கும் விழாவில் வைகோ!

ஈரோடு இதயம் நற்பணி இயக்கம் டிரஸ்ட் மற்றும் ஈரோடு மாவட்ட மறுமலர்ச்சி இரத்ததான கழகம் நடத்தும் செவிலியர்களுக்கு நைட்டிங்கேல் விருது வழங்கும் விழா மற்றும் இரத்ததானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா இன்று ஈரோட்டில் நடைபெற்றது.

இன்று மாலை ஈரோட்டில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு‌ விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். 

அதற்கு முன்னர், அண்மையில் விபத்தினால் பாதிக்கப்பட்ட நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகரச் செயலாளர் சிவகுமார் அவர்களை கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சந்தித்து நலம் விசாரித்தார்.

இன்று இரவு நிகழ்ச்சி முடிந்த பின்னர், இரவு 22:22 மணிக்கு ஒரு வயதான மூதாட்டி தலைவர் வைகோவை சந்தித்தார். இவ்வாறு பொதுமக்களை இரவு பகல் பாராமல் சந்திக்கும் ஒரே உன்னதமான தலைவர் வைகோ அவர்கள் மட்டுமே.

எனவே பொது ஜனங்களே, உங்களிடம் கை கூப்பி கேட்கிறோம், இப்பொழுதே முடிவெடுங்கள், உங்கள் வாக்குகளை பம்பரம் சின்னத்தில் தாருங்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் பம்பரம் சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை செலுத்தி உங்களை காக்கும் காவலர் வைகோவை அரியணையில் ஏற்றுங்கள். மதுவில்லா மாநிலமாக மாற்றுவார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

மறுமலர்ச்சி திமு கழக மாநகராட்சி அமைப்புகள்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநகராட்சி அமைப்புகள் தலைமை கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையெலேயே இனிமேல் இயங்கும்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

நேதாஜி குறித்து எழும்பூரில் பேசுகின்றார் வைகோ!

வருகிற அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி அன்று வங்கத்துச் சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் பற்றி நேதாஜி இயக்கம் தலைவர் தேபி பிரசாத் புருஸ்டி முன்னிலை வகிக்க தலைவர் வைகோ அவர்கள் தலைமை உரை ஆற்றுகின்றார்..
தலைப்பு : " நேதாஜி பேசுகின்றார்"
நாள் : Oct 1
இடம்: சிராஜ் மஹால்,
எழும்பூர் (தொடர்வண்டி நிலையம் அருகில்)
நேரம் : காலை 9 மணி
கழகத் தோழர்கள் பெருமளவு பங்கேற்கவும் ஓமன் மதிமுக இணையதள அணி அன்போடு கேட்டுக்கொள்கிறது.

மதிமுக இணையதள அணி - ஓமன்

மதிமுக உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் நியமனம்!


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களாக, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் டாக்டர் க.சந்திரசேகரன, விருதுநகர் மாவட்டச் செயலாளர் திரு.ஆர்.எம்.சண்முகசுந்தரம், அரியலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் கு.சின்னப்பா ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள் என தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நிலை குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களை ஓமன் மதிமுக இணையதள அணி வாழ்த்துவதோடு, கழக பணிகளை இன்னும் துரிதமாக செய்யவும் கேட்டுகொள்கிறது.

மதிமுக இணையதள அணி - ஓமன்

Tuesday, September 29, 2015

கோவை SNR கல்லூரியில் உரையாற்றினார் வைகோ!

அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கத்தின் பவள விழா இன்று கோவை மாநகரில், நவ இந்தியா அருகிலுள்ள SNR கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. இதில் தமிழின முதல்வர் வைகோ அவர்கள் கலந்துகொண்டார். 

மக்கள் தலைவர் வைகோ அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் நிகழ்ச்சியில் மலர் வெளியீடு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தலைவர் வைகோவிற்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. 

இன்றைய நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அண்ணன் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் அவர்களும் கலந்துகொண்டார். 

தலைவர் சிறப்புரையாற்றினார். கழக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

கோவை வந்தார் வைகோ! தொண்டர்கள் உற்சாக வரவேற்ப்பு!

தமிழின முதல்வர் வைகோ அவர்கள் இன்று 29.09.2015 ம்நாள் மாலை 05.30மணிக்கு கோவை நவஇந்தியா SNR கலையரங்கத்தில் நடைபெறும் அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கம் கோவை மையம் நடத்தும் நிகழ்ச்சியில் 'கட்டிடக் கலை' என்னும் தலைப்பில் உரை முழக்கம் நிகழ்த்துவதறகாக இன்று காலை 11 மணி அளவில் கோவை வந்தார்.

கோவை விமான நிலையத்தில் மக்கள் தலைவர் வைகோ அவர்களை வரவேற்க கோவை மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர். மோகன்குமார் மற்றும் நிர்வாகிகள் தயார் நிலையில் இருந்தனர். தொண்டர்கள் ஆர்ப்பரிக்க வரவேற்றனர்..

தலைவர் வைகோ அவர்கள் வருவதை அறிந்த பத்திரிகையாளர்கள் கோவை விமான நிலையத்தில் அவரை சூழ்ந்துகொண்டனர். பத்திரிகையாளர்களை மதிக்கும் தலைவரும் பேட்டியளித்தார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

பாழான விவசாயப் பயிர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்காதது ஏன்? வைகோ கண்டனம்!

பருவ மழை பொய்த்ததாலும், பாசன தண்ணீர் கிடைக்காததாலும், வேளாண்மை இடுபொருள் விலை ஏற்றத்தாலும், விளை பொருளுக்குரிய லாபகரமான விலை கிடைக்காததாலும், கடன் வாங்கி மேற்கொண்ட விவசாயத்தில் திடீர் நோய்கள் ஏற்பட்டு பயிர்கள் அழிவதாலும், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் திடீரென்று ஏற்படுகின்ற சூறாவளிப் பேய்க்காற்றால் அடியோடு நாசமாவதாலும் தமிழக விவசாயிகள் தொடர்ந்து தாங்க முடியாத துன்பத்துக்கும் துயரத்துக்கும் ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு சூறாவளிப் பேய்க்காற்றால் பாழாகிப்போன வாழைகளுக்கு நட்டஈடு வழங்கக் கோரி விவசாயிகள் பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையிட்டும் தமிழக அரசு இன்றுவரை எந்த நிவாரணமும் வழங்கவில்லை. தற்போது இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்கனவே வறட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்ற சங்கரன்கோவில் வட்டம், குருவிகுளம் ஒன்றியத்தில் வெங்கடாசலபுரம், இளையரசனேந்தல், வடக்குப்பட்டி, தோணுகால் கிராமப் பகுதிகளில் பலத்த காற்று மழையால் ஏறத்தாழ 20 ஆயிரம் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்துவிட்டன.

ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 75 ஆயிரம் ரூபாய் செலவு செய்து வாழையைப் பயிரிட்ட விவசாயிகள் தற்போது தாங்க முடியாத அதிர்ச்சியால் தாக்குண்டு அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அவதிப்படுகிறார்கள்.

இதுபோன்று தமிழகத்தில் எங்கெல்லாம் இப்படிப்பட்ட சேதம் ஏற்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் ஏக்கருக்கு ஒரு இலட்ச ரூபாய் நட்ட ஈடு வழங்க உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என தனது அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

இன்று கோவை எஸ்.என்.ஆர். கல்லூரியில் தலைவர் வைகோ உரை!

அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கம் கோவை மையத்தின் பவள விழா, பீளமேடு, நவ இந்தியா, எஸ்.என்.ஆர். கல்லூரிக் கலையரங்கில் இன்று (29.09.3015) மாலை 5:00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு "கட்டிடக் கலை" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவிருக்கிறார்.

கழக தோழர்கள் திரளாக கலந்துகொள்ள ஓமன் மதிமுக இணையதள அணி வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

Monday, September 28, 2015

சர்வதேச விசாரணை வேண்டி கைதாகி வைகோ விடுதலை!

ஈழத்தமிழர் படுகொலைக்கு உள்நாட்டு விசாரணை போதும் என்ற அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐநாவின் மனித உரிமை ஆணைய அறிக்கையின்படி சர்வதேச விசாரணையே வேண்டும் என்று அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிடும் போரட்டம் நடந்தது.

இன்றைய அமெரிக்க தூதரக முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் தலைவர் வைகோ எப்போதும் போல் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். கொடும்பாவிகள் கொளுத்தும் போதும் புகைப்படங்கள் கொளுத்தும் போதும் மேடையிலிருந்து கண்காணித்து கொண்டு இருந்தார். கைது நடவடிக்கையை காவல்துறை மேற்க்கொண்டவுடன், அனைவரையும் வழக்கம் போல பாதுகாப்பாக காவல்துறை வண்டியில் ஏற்றி விட்டு இறுதியாக தானும் ஏறினார் தலைவர் வைகோ.

பின்னர் எழும்பூர் மோதிலால் திருமண மண்டபத்தில் அனைவரையும் அடைத்து வைத்தனர் போலீசார். 

மண்டபத்திலிருந்தவாறே கைதான தொண்டர்களிடத்தில் பேசிய தலைவர் வைகோ அவர்கள், அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களுடனான சந்திப்பை நினைவு கூர்ந்தார். 

வெறும் 28 பேரோடு காட்டுக்குள் சென்ற தேசியத் தலைவர் பிரபாகரன் ஒன்றரை லட்சம் இந்திய ராணுவத்தை எதிர்க்கிற படையை தயாரித்தார். பங்காளி சண்டையிட்டு கொண்டு கட்சி தலைமை மீது அவதூறு சொல்லி திமுக விடமிருந்து வரவில்லை. ஈழத்திற்கு சென்று வந்த பின்பு அவதூறால் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டேன் என கூறினார்

அமெரிக்க தேசியக் கொடியையும் மற்ற அமெரிக்க-இலங்கை தலைவர்களின் படத்தையும் தயாரித்து ஆர்ப்பாட்டத்தில் கொளுத்த வேண்டும் என நேற்றிரவே திட்டமிட்டேன். ஸ்பெயின். ஸ்காட்லாந்து போன்றவை வாக்கெடுப்பால் தனி நாடாக போகிறது. அது போன்றே தமிழீழம் மலரும் என்பதைத்தான் என் இதயத்திலிருந்து சொல்லி வருகிறேன் எனவும் வைகோ தெரிவித்தார்.

நீர் மூழ்கி கப்பலை தயாரித்தது., விமானப்படைகளை வைத்திருந்தது போன்ற சாதனைகளை செய்தது விடுதலைப்புலிகள் இயக்கம். இந்திய படை தலையிடாமல் இருந்திருந்தால் விடுதலைப் புலிகள் வெற்றி பெற்றிருப்பார்கள் என்றார் வைகோ.

வேலு நாச்சியார் நாடகங்கள் அரங்கேற்றப் பட்டது விடுதலை உணர்வு மேலோங்க வேண்டும் என்ற ஆசையில்தான் எனவும் கூறினார் தலைவர் வைகோ.

மாலை நேரம் ஆனதும், முறைப்படி காவல்துறை விடுதலையை அறிவித்து போராட்டக்காரர்களை விடுதலை செய்தார்கள். விடுதலையின் போது காவல்துறை அதிகாரி தலைவர் வைகோ அவர்களுக்கு நன்றி கூறினார். தலைவரும் காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி கூறினார். 

பின்னர் தொண்டர்கள் அவரவர் இல்லம் திரும்பியதும், தலைவர் வைகோ அவர்களும் இல்லம் திரும்பினார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்