ஈரோடு இதயம் நற்பணி இயக்கம் டிரஸ்ட் மற்றும் ஈரோடு மாவட்ட மறுமலர்ச்சி இரத்ததான கழகம் நடத்தும் செவிலியர்களுக்கு நைட்டிங்கேல் விருது வழங்கும் விழா மற்றும் இரத்ததானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா இன்று ஈரோட்டில் நடைபெற்றது.
இன்று மாலை ஈரோட்டில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
அதற்கு முன்னர், அண்மையில் விபத்தினால் பாதிக்கப்பட்ட நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகரச் செயலாளர் சிவகுமார் அவர்களை கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சந்தித்து நலம் விசாரித்தார்.
இன்று இரவு நிகழ்ச்சி முடிந்த பின்னர், இரவு 22:22 மணிக்கு ஒரு வயதான மூதாட்டி தலைவர் வைகோவை சந்தித்தார். இவ்வாறு பொதுமக்களை இரவு பகல் பாராமல் சந்திக்கும் ஒரே உன்னதமான தலைவர் வைகோ அவர்கள் மட்டுமே.
எனவே பொது ஜனங்களே, உங்களிடம் கை கூப்பி கேட்கிறோம், இப்பொழுதே முடிவெடுங்கள், உங்கள் வாக்குகளை பம்பரம் சின்னத்தில் தாருங்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் பம்பரம் சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை செலுத்தி உங்களை காக்கும் காவலர் வைகோவை அரியணையில் ஏற்றுங்கள். மதுவில்லா மாநிலமாக மாற்றுவார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment