22.09.2015 ஆம் நாளன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்கள் தலைமையில் கலிங்கப்பட்டியில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மேற்கொள்ளும் மறுமலர்ச்சிப் பயணத்தின் முதல்கட்ட நிகழ்ச்சிகள் பின்வரும் நாட்களில் நடைபெறும்.
அக்டோபர் 3 ஆம் தேதி காலை 9 மணி காஞ்சிபுரம் மாவட்டம் பேரறிஞர் அண்ணா அவர்களின் இல்லத்தில் இருந்து வைகோவின் மறுமலர்ச்சிப் பயணம் வேன் பிரச்சாரமாக நடைபெறும்.
அக்டோபர் 03, 04 நாட்களில் காஞ்சிபுரம் மாவட்டம்
அக்டோபர் 09, 10 கரூர் மாவட்டம் - அரவக்குறிச்சியில் தொடங்கும்
அக்டோபர் 14, 15 மதுரை புறநகர் மாவட்டம் - திருமங்கலத்தில் தொடங்கும்
அக்டோபர் 17, 18 தூத்துக்குடி மாவட்டம் - திருவைகுண்டத்தில் தொடங்கும்
அக்டோபர் 19, 20 நெல்லை புறநகர் மாவட்டம் - தென்காசியில் தொடங்கும்
அக்டோபர் 21, 22 குமரி மாவட்டம் - கருங்கல் புதுக்கடையில் தொடங்கும்
அக்டோபர் 31, நவம்பர் 01 விருதுநகர் மாவட்டம் - சாத்தூரில் தொடங்கும்
நவம்பர் 02, 03 தஞ்சை மாவட்டம் - குடந்தையில் தொடங்கும்
நவம்பர் 04, 05 திருவள்ளூர் மாவட்டம் - பூவிருந்தவல்லியில் தொடங்கும்
நவம்பர் 11, 12 திண்டுக்கல் மாவட்டம் - வேடச்சந்தூரில் தொடங்கும்
மாவட்டச் செயலாளர்கள் ஆங்காங்கு உள்ள ஒன்றிய, நகர செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், கிளைக் கழக, வட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து மறுமலர்ச்சிப் பயணத்தை வெற்றிகரமாக்குவதற்கு ஆவண செய்ய வேண்டுமென அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்கள் அறிக்கை தந்துள்ளார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment