ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு இலங்கையே விசாரணை செய்யும் என தீர்மானிக்கும் அமெரிக்க அரசைக் கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரக முற்றுகை போராட்டம் இன்று நடந்தது.
அமெரிக்க தூதரக முற்றுகை போருக்கு செல்ல தாயகத்தில் துணைப் பொது செயலாளர் அண்ணன் மல்லை சத்யா அவர்கள், இனமான இயக்குனர் ஈழதமிழர்களுக்காக குரல் எழுப்பிக்கொண்டிருக்கும் புகழேந்தி தங்கராஜ், மதிமுகவின் கவிஞர் மணி வேந்தன் ஆகியோர் தயாராக இருந்தனர்.
தலைவர் வைகோ, கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர் போராட்ட களத்திற்கு வந்தனர். போராட்டம் தொடங்கியது. அண்ணன் மல்லை சத்யா அவர்கள், அயோக்ய அமெரிக்காவே தமிழீழ விடுதலையை தடுக்காதே. சமரசம் இல்லை சமரசம் இல்லை.தமிழீழ விடுதலையில் சமரசமில்லை என ஆர்ப்பாட்ட முழக்கமிட்டார்.
ஆர்ப்பாட்ட மேடையில் கட்சிக்கு ஒருவர் போதும் என கண்டிப்புடன் தலைவர் வைகோ கூறினார்.
திரு.கோவை ராமகிருஷ்ணன் அவர்கள், தலைவர் வைகோ உள்ளிட்டோர் உரையாற்றினர். பின்னர் ரணில், ராஜபக்சே, அமெரிக்க கொடி போன்ற கொடும்பாவிகள் கொளுத்தப்பட்டது. எரிந்துகொண்டிருந்த கொடும்பாவிகளை காட்டி பேசிய தலைவர் வைகோ அவர்கள், சுதந்திர ஜுவாலை இப்படிதான் எரியும். சிங்கள ஆதிக்கம, துரோகிகள் ஆதிக்கம் எல்லாம் சாம்பல் ஆகும் என தெரிவித்தார். அதற்காகதான் நாங்கள் கொளுத்தியிருக்கிறோம் என கூறினார்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் தலைவர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்களை காவல்துறை கைது செய்தது. கழக கண்மணிகளும் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரையும் எழும்பூர் மோதிலால் திருமண மண்டபத்தில் வைத்திருந்தது காவல்துறை.
மறுமலர்சி மைக்கேல்
No comments:
Post a Comment