கலிங்கப்படியில் தலைவர் வைகோ அவர்களின் வீட்டு உதவியாளர் சந்துரு அவர்களுக்காக தலைவர் வைகோ மற்றும்வரது தம்பி ரவிசந்திரன் ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு வீடு கலிங்கப்பட்டியில் கட்டிக்கொடுத்துள்ளனர்.
இதன் திறப்பு விழா 22-9-2015 அன்று மதிமுக கழக அவை தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்கள் திறந்து வைத்தார். அப்போது தலைவர் வைகோ, சந்துரு மற்றும் அவரது குடும்பத்தினர், கழக மாவட்ட செயலாளர்கள், கூட்டியக்க தலைவர்கள் உடனிருந்தனர்.
அந்த நிகழ்ச்சிக்காக வந்திருந்த மேள தாள வாசிப்பாளர்களை வீட்டுக்குள் வரவழைத்து பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார் தலைவர் வைகோ.
பின்னர் மாவட்ட செயலாளர்கள் கூடம் நடந்தது. அனைத்து மாவட்ட செயலாளர்களையும் மேடையில் அமர்த்தி அழகு பார்த்தார் வைகோ. அவர்கள் தான் கட்சியை காப்பாற்றுகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
நான் இறந்த பின்னரும் என் குடும்பத்தில் இருந்து யாரும் கட்சிக்கோ பதவிக்கோ வரமாட்டார்கள் என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-எங்கள் கட்சியில் இருந்து சிலரை இழுத்துக்கொண்ட கருணாநிதிக்கு நன்றி. எங்கள் கட்சி இப்போது எழுச்சி பெற்றிருக்கிறது. எனது உதவியாளர்களில் ஒருவருக்கு கலிங்கப்பட்டியில் வீடு கட்டி கொடுத்தோம். அதன் திறப்பு விழா நடந்தது. இதில் பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு ஜெகன் தனசேகரன், பார்த்திபன், வளையாபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக ஜெய்சங்கர், சேலம் மாவட்ட செயலாளர்களாக கோபால்ராஜ், மகேந்திரவர்மன், ஆனந்தராஜ் ஆகியோரும், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்களாக மார்நாடு, கதிரேசன் ஆகியோரும், மாநில மகளிர் அணி செயலாளராக ரொகையாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.மாநில பொருளாளர், கரூர் மாவட்ட செயலாளர் பின்னர் தேர்வு செய்யப்படுவர். தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டங்களாக மறுமலர்ச்சி பயணம் மேற்கொள்கிறேன். வரும் அக்.,3ம் தேதி காஞ்சிபுரத்தில் பயணம் துவங்குகிறது. 3,4 காஞ்சிபுரம், 9,10 திருவள்ளூர்,14,15 மதுரை புறநகர்,17,18 தூத்துக்குடி, 19,20 நெல்லை, 21,22 கன்னியாகுமரி, 23,31 விருதுநகர், நவம்பர் 2,3 தஞ்சாவூர்,4 அரியலூர், 5 பெரம்பலூர், 11,12 தேனி ஆகிய மாவட்டங்களில் பயணம் மேற்கொள்கிறேன் என்றார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment