சென்னை தலைமையகம் தாயகத்தில் மாவட்ட செயலாளர்கள், கழக உயர் நிலை குழு, ஆட்சி மன்ற குழு, அரசியல் ஆலோசனை குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் மதிமுக அவை தலைவர் திருப்பூர் துரைசாமி அவா்கள் தலைமையில் தொடங்கியது. தலைவர் வைகோ அவர்கள் உரையாற்றினார்.
தீர்மானங்கலை அண்ணன் செந்திலதிபன் அவர்கள் வாசித்தார்கள்.
இதில் முக்கிய தீர்மானமாக,
1. தலைவரின் பொன்விழா மாநாடு பிப்.9 காமராஜ் அரங்கில் நடக்கிறது. இதில் அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
2. மதிமுக அமைப்பு தேர்தல் வரும் நவம்பர் மாதம் தொடங்குகிறது.
3. வருகிற செப்.21 ஈழத் தமிழர்கள் நலனுக்காக.பன்னாட்டு விசாரணை வேண்டி அறப்போர்.
4. காவிரியில் தண்ணீரை திறந்துவிடவேண்டும் என்பன தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட செயலாளர்கள், கழக உயர் நிலை குழு உறுப்பினர்கள், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்கள், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment