மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்திற்கு இன்று 7-9-2015 திங்கள் மாலை மக்கள் நலன் காக்கும் கூட்டியக்க தலைவர்கள் வருகை தந்தார்கள். பின்னர் மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் கலந்தாய்வு கூட்டம் துவங்கியது. பல ஆலோசனைகளை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்திக்க தயாரானார்கள்.
பத்திரிக்கையாளர் கூட்டமாக திரண்டிருந்தர்கள். தலைவர்கள் பேட்டியளித்தார்கள், அப்போது பேசிய தமிழின முதல்வர் வைகோ அவர்கள், மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை எதிர்த்தே மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் செயல்படுகிறது. ஆண்ட... ஆளுகின்ற... எதிர்பார்க்கும் கட்சிகளுக்கு கூடும் கூட்டத்தை வைத்து கணக்கு போடாதீர்கள் என பேசினார்.
மக்களின் மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம். வள்ளுவர் கோட்ட போராட்டத்திற்கு பிறகும் 20 தமிழர் படுகொலை குறித்து தமிழக அரசு கருத்து தெரிவிக்கவில்லை. மீத்தேன் அறப்போராட்டம் தொடரும். ஸேல் கேஸ் திட்டம் அதைவிட மோசமானது. ONGC கள்ளத்தனமாக அதில் ஈடுபடுகிறது. காவிரி தீர மக்களை காக்க வேண்டிய பொறுப்பும் இருக்கிறது என கூறினார் வைகோ.
அக்டோபர் 3 ஆம் தேதி திருவாரூரில் காவிரியில் கர்நாடகம் அணை கட்டுவதை எதிர்த்து மக்கள் திரள் பேரணி நடைபெறும். மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொண்டுள்ளோம். இந்த கூட்டணிக்கு ஐவருமே தலைவர்கள் எனவும் பெருந்தன்மையாக கூறினார் வைகோ.
செய்தியாளர்கள் கூட்டத்தில் பத்திரிக்கையாளர் ஒருவர் வைகோவை நோக்கி, திரு.மணியன் அவர்கள் இந்த மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் இறுதியில் திமுக அல்லது அதிமுகவுடன் சேர்ந்து விடும் என்று சொல்லி இருக்கிறாரே என்று கேட்டார். பதிலளித்த தலைவர் வைகோ அவர்கள், வேண்டுமென்றால் பத்திரம் எழுதி கொண்டு வாருங்கள் கையெழுத்து போட்டு தருகிறோம் என்று கூறினார்.
திரு.திருமாவளவன் அவர்கள் திமுகவுடன் கூட்டணி எதுவும் இல்லை, நட்பு ரீதியிலான உறவு மட்டுமே உண்டு என்றார். அதற்கு தலைவர் வைகோ அவர்கள், நட்பு என்றால்… என்ன... நல்ல இருக்கீங்களா... என பார்த்தால் பேசினால் கேட்டு கொள்ளும் உறவு என விளக்கம் கொடுத்தார்.
மக்கள் இப்படி ஒரு கூட்டணி அமையாதா என ஏங்கி கொண்டிருந்தார்கள். அது இப்போது சாத்தியமாகிவிட்டது. இந்த கூட்டணியில் மற்ற கட்சிகளை இணைக்கும் பேச்சு வார்த்தையும் நடந்து கொண்டிருக்கிறது என்றார் தமிழின முதல்வர் வைகோ அவர்கள்.
மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களும், திமுக கூட்டணியில் இல்லை என தெரிவித்தார்.
பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த பின்னர், மக்கள் நலன் காக்கும் கூட்டியக்க தலைவர்களை எப்போதும் போல வாசல் வரை வந்து வழி அனுப்பி வைத்தார் தமிழக மக்களைன் தன்னிகரில்ல தமிழின முதல்வர் வைகோ அவர்கள்.
மதிமுக இணையதள அணி – ஓமன்

No comments:
Post a Comment