நாளை நடக்க இருக்கிற 107 ஆவது அண்ணா பிறந்த நாள் விழா, திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டிற்கு சுவர் விளம்பரங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் எங்கள் பகுதியாம் நாகர்கோயிலில் செய்திருந்தோம்.
சரித்திரம் படைக்க போகும், திருப்பத்தை ஏற்ப்படுத்தகூடிய திருப்பூர் மாநாடிற்காக மதிமுக பொதுகுழு உறுப்பினர் பாசத்திற்குரிய அண்ணன் ஆனந்தராஜன் அவர்களுடன் இந்த எளியவனும்(மறுமலர்ச்சி மைக்கேல்) பங்களித்து இந்த சுவர் விளம்பரங்கள் செய்திருந்தோம். இதை போல ஆனந்த ராஜன் அவர்கள் சுமார் 70 க்கும் மேற்ப்பட்ட சுவர் விளம்பரம் செய்துள்ளார்.
இன்று இரவு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 10 பேருந்துகள் மற்றும் மகிழுந்துக்களில் திருப்பூர் மாநாட்டிற்காக கழக கண்மணிகள் செல்கின்றனர். இதில் ஆனந்த ராஜன் ஒரு பேருந்து, பொறியாளர் அணியின் குமரி மாவட்ட செயலாளர் அண்ணன் சுரேஷ் குமார், தக்கலை ஒன்றிய செயலாளர் JP சிங், பள்ளியாடி குமார் ஆகொயோர் தலா ஒரு பேருந்துகளிலும், மேலும் பலர் பேருந்துகளிலும் செல்கின்றனர்.
மாநாடு சரித்திரம் படைக்க போகிறது. அதிமுக, திமுக அலறுகிறது. அகிலத்தின் தமிழகத்தை ஆள மதிமுக முன்னேறி செல்கிறது.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment