கடந்த 4 ஆம் தேதி செப்டம்பர் மாதம் வெள்ளி கிழமையன்று மதியத்திற்கு தொடங்கி இரவு வரை சென்னை லயோலா கல்லூரியின் வெளியே வாசல்களில் நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மதிமுக மாணவரணி துணை செயலாளர் கொடை வள்ளல் பாசத்திற்குரிய அண்ணன் சீர்காழி மார்க்கோனி இமயவரம்பன் அவர்களின் ஏற்பாட்டில் மாநாட்டு அழைப்பை கல்லூரிக்கு வருகிற போகிற மாணவர்களிடத்தில் மதிமுக வின் இணையதள அணியினர் கொடுத்தார்கள். மேலும் சாலைகளில் போகிற பேருந்து பயணிகளிடத்திலும் "ஒரே ஒரு முறை 100 ஆண்டுகள் பேசும் தலைமுறை" "திருப்பத்தை ஏற்படுத்த திருப்பூருக்கு வாருங்கள்" என்னும் வாசகங்கள் அடங்கிய அச்சிடப்பட்ட மாநாட்டு அழைப்பை கொடுத்தார்கள்.
இந்த பெரிய பணியை செய்த மதிமுக இணையதள அணி நண்பர்களான, பாசத்திற்குரிய அண்ணன் நல்லு லிங்கம், மீசைகார சகோதரன் வைகோ கார்த்திக், மதிமுக இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன், அன்பிற்குரிய சகோதரர் ஹமீது சாஹுல் மற்றும் மதிமுகவின் மறுமலர்ச்சி மாணவர் மன்ற மாநில அமைப்பாளர் அன்புக்குரிய தம்பி, மாணவர்களின் எழுச்சி நாயகன் சசி குமார், சீர்காழி பெற்றெடுத்த சீதனம் அண்ணன் மார்க்கோனி மற்றும் சக தோழர்கள் சிரமம் பாராமல் கழக பணியாற்றினர். அவர்களுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மதிமுக இணையதள அணியினரின் இந்த சிறப்பான பணியை பாராட்டி "தமிழக அரசியல்" என்னும் வார ஏடு பிரசுரம் செய்துள்ளது. இது மதிமுக இணையதள அணிக்கு கிடைத்த பெரிய அங்கிகாரமும், வெற்றியுமாகும்.
நண்பர்களே!
மாசற்ற மாணிக்கம், அரசியல் வரலாற்றில் பொன்மகுடம் சூட்டிய வள்ளல், தனக்கென்று வாழாது தமிழகத்திற்காகவும், தமிழீழத்திற்காகவும் தனது வாழ்நாளை அற்பணித்த தியாகி, அரை நூற்றாண்டு கால அரசியலின் நேர்மைக்கான அங்கிகாரம், தமிழ்நாட்டின் ஊழியன், மதிமுக பொதுச்செயலாளர், தமிழின முதல்வர் வைகோ அவர்கள், மதிமுக இணையதள அணியினரின் செயல்பாடுகளை, அவர்களினால் கழகம் பல நாடுகளை இலகுவாக சென்றடைந்துகொண்டிருப்பதை, அவர்களின் ஆக்கப்ப்பணிகளை கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார். வருகிற மாநாட்டிலோ அல்லது வருகிற கழக தேர்தலிலோ மதிமுக இணையதள அணி என தனி அணியாக செயல்பட தலைவர் அங்கிகாரம் தருவார் என்ற நம்பிக்கையில் வீரியமாக செயல்படுவோம். அவர் பால் அவரின் சிந்தனைக்கேற்ப கழக பணியாற்றுவோம்.
திருப்பத்தை ஏற்ப்படுத்துவோம் திருப்பூர் பல்லடத்தில், முன்னேறி செல்கிறோம், அதிகாரத்தை விரைவில் கைப்பற்றுவோம். வெற்றி பறை கொட்டுவோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment