2015 செப்டம்பர் 15 மாநாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து எந்தெந்த ஒன்றிய-நகர-பேரூர் - சிற்றூரில் இருந்தும்,கழகம் அமைத்துள்ள அணிகளின் தரப்பிலிருந்தும் எத்தனை வாகனங்களில் வந்தார்கள்? என்ற சரியான விபரத்தை தலைமைக் கழகம் தெரிந்து கொள்ள இந்த முறை திட்டமிட்டுள்ளது.அதற்கென வாகனங்கள் கண்காணிப்பு குழுவையும் அமைத்துள்ளது.கழகப் பொதுக்குழு உறுப்பினர் மதுரை மாநகர் தொண்டர்படை சேகர்,ஆயிரம்விளக்கு பகுதிப் பொறுப்பாளர் வழக்கறிஞர் தங்கவேல்,தேர்தல் பணி துணை செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன்,திருநின்றவூர் கழகச் செயலாளர் Autoraj Mdmk,மத்திய சென்னை மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கார்த்திக்கேயன் பொன்ராஜ் ஆகிய ஐவரும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் ஆவர்.
இந்த குழுவின் கலந்தாய்வு கூட்டமானது, ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் அண்ணன் டி.ஜே.தங்கவேல் அவர்கள் தலைமையில் தாயகத்தில் இன்று நடைபெற்றது. வாகன கண்காணிப்புக் குழுவினர் மதிமுக இணையதள தோழர்களின் உதவியை நாடியிருப்பது ஒருங்கிணைந்து செய்வதாகவே அமைகிறது.
வெற்றி நமதே!
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment