அண்ணாவின் 107 ஆவது பிறந்த நாள் விழா, திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தலைவர்கள் மிகுந்த உணர்ச்சிகளோடு உரையாற்றிக்கொண்டிருக்கின்றனர்.
ஈழத்தில் இனப்படுகொலை பற்றிய கண்காட்சி ஒரு கருத்து பெட்டகம். அதை உருவாக்கியவர்களுக்கு நன்றி என தன் மாநாட்டு பேச்சினூடே தெரிவித்தார் தியாக வேங்கை அண்ணன் கணேச மூர்த்தி அவர்கள். அவர்களுக்கு நன்றி.
இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் ஈழத்தில் இனப்படுகொலை பற்றிய கண்காட்சியை பார்வையிட்டு நெகிழ்ந்தார். சில படங்கள் மிக அபூர்வமானதென்றும், இதை தலைநகர் சென்னையில் நடத்த முடியுமா என கேட்டார். பின்னர் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு மாதிரியில் கலந்துகொண்டு வாக்களித்தார்.
தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு மாதிரியில் கலந்துகொண்டு மாநில மகளரணி துணைச் செயலாளர் அக்கா மல்லிகா தயாளன் அவர்களுடன் சகோதரிகள் வாக்களித்தனர்.
தமிழீழ புகைப்பட கண்காட்சியில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் டாக்டர் சரவணன் அவர்கள் பார்வையிட்டு பொதுவாக்கெடுப்பிற்காக வாக்களித்தார்.
தலைவர் வைகோ அவர்களின் சகோதரர் தடா திரு.ரவிச்சந்திரன் அவர்கள் கண்காட்சியை பார்வையிட்டு வாக்களித்தார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment