ஈழத்தமிழர்களுக்கு நீதியை வழங்க அனைத்துலக நாடுகளை வலியுறுத்தவும், குறிப்பாக இந்தியாவின் நரேந்திர மோடி அரசு, சிங்கள அரசுக்கு துணைபோகும் துரோகத்தைச் செய்யாமல் பன்னாட்டு நீதி விசாரணைக்கான தீர்மானத்தை மனித உரிமைக் கவுன்சிலில் முன் வைக்க வலியுறுத்தவும், இன்று செப்டம்பர் 21 இல் தாய்த் தமிழகத்தில் காலை 11 மணி அளவில் தலைநகர் சென்னையிலும், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மாபெரும் அறப்போர் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் திருநெல்வேலி இரயில்வே சந்திப்பு அருகில் நடைபெற்ற அறப்போர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினார்.
திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலாளர் எÞ.பெருமாள், திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலாளர் ப.ஆ.சரவணன், மாணவர் அணி மாநிலச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் சதன் திருமலைக்குமார், இலக்கிய அணி மாநிலத் தலைவர் மதுரா, இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய-நகர செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment