தமிழின முதல்வர் வைகோ அவர்கள் இன்று 29.09.2015 ம்நாள் மாலை 05.30மணிக்கு கோவை நவஇந்தியா SNR கலையரங்கத்தில் நடைபெறும் அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கம் கோவை மையம் நடத்தும் நிகழ்ச்சியில் 'கட்டிடக் கலை' என்னும் தலைப்பில் உரை முழக்கம் நிகழ்த்துவதறகாக இன்று காலை 11 மணி அளவில் கோவை வந்தார்.
கோவை விமான நிலையத்தில் மக்கள் தலைவர் வைகோ அவர்களை வரவேற்க கோவை மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர். மோகன்குமார் மற்றும் நிர்வாகிகள் தயார் நிலையில் இருந்தனர். தொண்டர்கள் ஆர்ப்பரிக்க வரவேற்றனர்..
தலைவர் வைகோ அவர்கள் வருவதை அறிந்த பத்திரிகையாளர்கள் கோவை விமான நிலையத்தில் அவரை சூழ்ந்துகொண்டனர். பத்திரிகையாளர்களை மதிக்கும் தலைவரும் பேட்டியளித்தார்.
No comments:
Post a Comment