மறுமலர்ச்சி வேங்கைகளே வணக்கம்,
வருகிற செப்டம்பர் 15 திராவிட கழக நூற்றாண்டு விழா, 107 ஆவது அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு திருப்பூர் பல்லடத்தில் நடைபெற இருக்கிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மிக விரைவாக முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
மாநாடு நடைபெறும்போது, அனேக கழகத்தின் கண்மணிகள் குடும்பங்கள் நேரடியாக செல்ல முடியாதவர்களுக்காக மாநாட்டு அனைத்து நிகழ்ச்சிகளும் நேரடியாக இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.
இந்த நேரலையை காணொளியாக அலைபேசியில் காண gogle play store ல் mdmk என டைப் செய்து பதிவிறக்கம் செய்து அந்த செயலி மூலம் நேரடியாக மாநாட்டு நிகழ்ச்சிகளை காணொளி காட்சியாக காணலாம்.
ஆனால் சிலருக்கு இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பாகவுள்ள மாநாட்டு நிகழ்வு காணொளி(video)யை காண்பதற்கு தேவையான வேகமான இணைய இணைப்பு (internet speed) இல்லாமல் இருக்கலாம். அவர்களின் வசதிக்காக நமது இணைய வானொலியில், மிகக்குறைந்த வேகம் கொண்ட 2G இணைய இணைப்பு கொண்டவர்களும் தெளிவாக கேட்ககூடிய வகையில் 32kbps bit rate யில் தலைவர்களின் பேச்சு நேரலையாக ஒலிபரப்பாகவுள்ளது. நமது கழக இணையதளத்தில் இணைய வானொலியை கேட்க http://mdmk.org.in/article/oct11/request-leader இணைப்பை சொடுக்கவும் . அனைத்து வகை மொபைல் போன் வாயிலாக கேட்க http://tunein.com/radio/VAIKO-s235854/
மாநாட்டு பிரகடனத்தை நேரடியாக கேட்கும் வாய்ப்பை பயன்படுத்துவீர்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment