செப்டம்பர் மாநாடு நடக்கவிருப்பதால் அந்த மாநாட்டு தேதி சுடர் தலைவர் கையில் அளிப்பதற்காக அதற்கு மூன்று நாள் முன்னதாகவே 12 ஆம் தேதி மாநாட்டு சுடர் ஓட்டம் திருச்சியில் இருந்து தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் அனுமதிகளும் பெறப்பட்டிருந்தன. இந்நிலையில் சுடர் ஓட்ட தொடக்க தினத்தன்று காவல் துறை அனுமதியை மறுத்ததால் மதுரை உயர் நீதிமன்றத்தை நாடியது மதிமுக.
இதில் மதிமுக மாணவரணி செயலாளர் அண்ணன் திமு ராஜேந்திரன் வழக்கறிஞர்களுடன் மனு தாக்கல் செய்திருந்தது விசாரணைக்கு வந்தது. இதில் நீதிபதி அனுமது அளித்து உத்தரவிட்டார். இதனால் தொடக்க நாள் காலை 9 மணி அளவில் தொடங்க வேண்டிய சுடர் ஓட்டம் மாலை 5 மணியை தாண்டி தொடங்கியது.
மதிமுக மாணவரணி செயலாளர் திமு ராஜேந்திரன், துணை செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம், மருத்துவர் ரோஹையா ஆகியோர் சிறப்புரையாற்றினர். சுடர் ஓட்டத்தை தொடங்கி வைத்த தியாகவேங்கை முன்னாள் பாராளுமனற உறுப்பினர் கணேஷ மூர்த்தி நிரைவுரையாற்றினார்.
சுடர் ஏற்றப்பட்டு மறுமலர்ச்சி மாணவர் மன்ற செயலாளர் உணர்ச்சிகுக்க பேச்சால் மாணவர்களை தன் வசம் வைத்திருக்கும் அன்பு தம்பி சசி குமார் அவர்கள் பெற்றுக்கொண்டு சுடர் ஓடத்தினை தொடங்கி ஓடினார்.
திராவிட இயக்க நூற்றாண்டு சுடர் ஓட்டம் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தார் விசுவாசத்தின் மறு உருவம் அண்ணன் கணேசமூர்த்தி அவர்கள்.
No comments:
Post a Comment