கழகத்தின் கண்மணிகளுக்காகவும், தமிழ்நாட்டில் வழி தெரியாமல் வேலை தேடிக்கொண்டிருக்கும், வேலையில்லா
பட்டதாரிகளிக்காகவும் அவர்களின் மேலுள்ள அக்கரையில் சவுதி அரேபியாவில் வாழுகின்ற கழகத்தின்
மேல் பற்றுள்ள நண்பர்களான குரு பிரசாத் விஜயன், சேவியர் தங்கராஜ் ஆகியோரால் 2013 ஆம்
ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் நாள் தொடங்கப்பட்டதுதான் மதிமுக வேலை வாய்ப்பு மலர்
முகநூல் பக்கம் https://www.facebook.com/mdmkjobs4u
இந்த மதிமுக வேலை வாய்ப்பு மலர் முகநூல் பக்கத்தினை பார்த்து வேலை
விண்ணப்பித்து வேலை பெற்றவர்கள் அநேகம். எனவே இந்த பக்கத்தை like செய்வதுடன் அனைத்து
நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்களையும், அவர்களின் நண்பர்களுக்கும் பகிர செய்யும்படி
செய்யுங்கள். இந்த பக்கத்தில் பொறியிலாளர்கள், டெக்னீசியன்கள், எண்ணை நிறுவனங்களில்
வேலை பார்க்க நிபுணர்கள், வணிகம், கணக்குகள் சம்பந்தமான வேலைகள், மேலும் பல தரப்பட்ட வேலைகளை பகிருகின்றனர்.
இதன் மூலம் கழகத்தின் வேலையில்லா கண்மணிகள் இந்த பக்கத்தினை பார்ப்பதால் இதில் வரும்
வேலைகளுக்கு விண்ணப்பித்து வேலைகளில் சேர முடியும்.
எனவே கழகத்தின் கண்மணிகள், வேலை தேடும் நம் நண்பர்களின் கவனத்தில்
சென்று சேர இந்த முகநூல் பக்கத்தை பகிரவும். இது பலரை சென்றடையும் போது வேலையில்லாமலிருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடைவர்.
இந்த முயற்சியை மேற்கொண்டு, இது வரை சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கும்
நண்பர்களுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துதலையும்
தெரிவித்துக்கொள்வதோடு, மேலும் இது போன்ற பல மக்கள் நல பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவும் வேண்டுகிறோம்.
"உதவி செய்வோம். ஊக்குவிப்போம். கழகத்தின்பால் கடமையாற்றுவோம்"
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment