Tuesday, September 15, 2015

தொண்டர் படை ஒத்திகை! தலைவர் வருகை! மாநாடு தொடக்கம்!

107 ஆவது அண்ணா பிறந்த நாள் விழா, திராவிட இயக்க நூற்றாண்டு விழா மதிமுக மாநாடு இன்று திருப்பூரில் நடைபெறுகிறது. இதில் தொண்டர் படை ஒத்திகை நடத்தப்பட்டது. தலைவர் வருகை புரிந்தார். 

கழக கொடியேற்றம் நடைபெறுகிறது. அனைத்து தலைவர்களும் மாநாட்டில் வருகை புரிந்துள்ளனர்.

மாநாட்டு பந்தலில் தமிழீழம் குறித்த பொது வாக்கெடுப்பிற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளதால் அனைவரையும் வாக்களிக்க வரும்படி அழைப்பு விடுக்கிறார்கள் தமிழீழ இனக்கொலை பட கண்காட்சி குழுவினர். காலை 9-00 மணி முதல் வாக்களிக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.

ஒருபுறம் கடமையை கண்ணாக செய்யும் வாகன அணிவகுப்பு குழுவினர். அனைத்து வாகனங்களையும் சரிபட ஒருங்கிணைத்து கண்காணிக்கின்றனர்.

மலேசிய நாட்டின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் தமிழர்களுக்காக போராடிக்கொண்டிருக்கும் பேராசிரியர் ராமசாமி மாநாட்டு திடலுக்க்கு வருகை புரிந்தார். தலைவர் வைகோ வரவேற்றார்.

மதிமுக இணையதள அணி  - ஓமன்







































No comments:

Post a Comment